Subscribe

BREAKING NEWS

15 May 2017

கணவன் மனைவியிடையே ஒற்றுமையும், அன்பும் ஓங்க ஓர் பரிகார ஸ்தலம்...

ஆலய தரிசனத்தில் இன்று நாம் பார்க்க இருப்பது நாம் நமது நண்பர்களுடன் சமீபத்தில் சென்று வந்த ஸ்ரீ துளஷீஸ்வரர் ஆலயம். இக் கோவில் தாம்பரம் –செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் சிங்கபெருமாள் கோவிலில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் மூன்று கிலோ மீட்டர் தூரம் சென்றால்  வருகின்றது.  நம்பர் 50,  கொளத்தூர் கிராமம். அங்கங்கே கோவிலுக்குச் செல்லும் பாதையை நமக்கு காட்டுகின்றது வழிகாட்டிப் பலகை.

 அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் சென்றால் இந்த திருத்தலத்தை அடைந்துவிடலாம். சிங்கபெருமாள் கோவிலில் இருந்து பேருந்து வசதி கிடையாது.  தனிப்பட்ட வாகனம் அல்லது ஆட்டோவில் செல்லலாம்.
நமக்கு எப்போதுமே ஐநூறு, ஆயிரம், ஆண்டுகளுக்கு முன் உள்ள மிகப் பழைமையான ஆலயங்களை தரிசிப்பதில் அலாதிப் பிரியம். அந்த வகையில் இந்த  கோவில் 1400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக ஸ்தல வரலாறு சொல்கின்றது. விக்ரம சோழன் காலத்தில் சீறும் சிறப்புமாகத் திகந்த இத் திருக்கோவில் கருங்கல் செங்கல்லால்
கட்டப்பட்டதாகத் தெரிகின்றது.  கால வெள்ளத்தில் இக் கோவில் சிதைந்து பல விக்ரகங்கள் பூமிக்கடியில் புதைந்து விட்டன.


திங்கட்கிழமைகளில் துளசியால் சிவபெருமானை அர்ச்சித்து வழிபடுவோரை சிவபெருமான் உமாதேவியரை எப்படி நேசிப்பாரோ அப்படி நேசிப்பார் என்பது ஐதீகம். தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானின் திருக்கல்யாணத்தைக் காண கயிலையங்கிரிக்குச் சென்றார்கள். அதனால்  பூமியின் வடபாகம் தாழ்ந்து, தென்பாகம் உயர்ந்தது.  அதை சமன் செய்ய ஈசன் குறுமுனி அகத்தியரை தென் திசைக்கு அனுப்பினார். தென் திசைக்குக் சென்ற  அகத்தியர் அங்கு 108 சிவ லிங்கங்களை நிறுவி பூஜித்தார். அந்த 108 சிவலிங்கங்களுள் ஸ்ரீ துளஷீஸ்வரர் லிங்கமும் ஒன்றாகும். கோவிலுக்குத் தெற்கே அகத்தியர் ஒரு தடாகத்தை உருவாக்கி கொன்றை மாலை சார்த்தி துளசியால் அர்ச்சித்து புரட்டாசி பவுர்ணமி நாளில் வழிபட்டார். இதனால் மகிழ்ந்த ஸ்ரீ துளஷீஸ்வரர்,







அகத்தியருக்கு அர்த்தனாரீஷ்வரராய் காட்சி கொடுத்தார். இவை அனைத்தும் இக் கோவில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
கணவன்-மனைவியிடையே ஒற்றுமையும், அன்பும் ஓங்கவும், இரண்டு பேரும்  சேர்ந்து வாழ வேண்டுமென்றும்,  அன்னியோன்யமாக இருக்க வேண்டும் என்றும் ஆசைப்படுவார்கள். ஆனால்  ஏதோ ஒரு ஈகோவினாலும்,  வைராக்கியத்தாலும் விட்டுக் கொடுக்காமல் இருப்பார்கள்.  அப்படிப்பட்டவர்களுக்கு  இந்த   ஸ்ரீ துளஷீஸ்வரர் ஒரு வாரத்தில் பலன் கொடுக்கிறார்.  (ஒரு முறை முயற்சி செய்து  பாருங்கள்.) ஜாதகத்தில் சந்திரன் நீசமாயிருப்போரும், சந்திர பலம் குறைந்திருப்போரும், திங்கட்கிழமைகளில்,  சந்திரஹோரையில் அர்ச்சனை செய்து ஆராதிப்பது விஸேஷமாகும்.
இத்தகைய சீரும் சிறப்பும் வாய்ந்த இத் திருக்கோவிலுக்கு 22 ஆகஸ்டு 2010 அன்று கும்பாபிக்ஷேகம் நடைபெற்றது. இக் கோவிலில் தினசரி  பூஜையும், விசேக்ஷ  நாட்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகின்றது.


நாம் நமது நண்பருடன் சென்றிருந்த அந்த தருணத்தில் விசேஷ பூஜைகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஒரு சில சினிமா பிரபலங்களும் இந்த தரிசனத்தில் கலந்து கொண்டனர். நண்பர் ராகேஷ்,  நாம் செல்வதற்கு முன்பே அங்கு சென்று விட்டார்போலும். நாம் அங்கு சென்றவுடன் வாங்க வாங்க என வரவேற்றார். கொஞ்சம் இருங்கள்  ராகேஷ்;  நான் போய் கணபதியிடம்  ஒரு பெர்மிஷன் வாங்கி வருகின்றேன்  எனச்  சொல்லிவிட்டு, கோவிலின் இடபாகத்தில் அமர்ந்திருந்த முதல்வரை வணங்கிய பின் உள்ளே சென்றோம். கோவிலைப் பார்த்தால் திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. யாக குண்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு தயாராக இருந்ததைக் காண முடிந்தது. ஒலிபெருக்கியில் வேதங்கள் ஒதிக் கொண்டிருந்தனர்.மிக்க அகமகிழ்ந்தோம் யாம்.!!!
அங்கு வந்திருந்த அனைவருக்கும் தனித்தனியாக சங்கல்பம் செய்துகொண்டிருந்தார் ஒரு அர்ச்சகர். நீங்களும் போய் சங்கல்பம் செய்து கொள்ளுங்கள் என்று நம் நண்பர் சொல்ல நாமும் செய்து கொண்டோம். ஒருவருக்கு சங்கல்பம் செய்ய 3 நிமிடம் ஆகின்றது.  இதில் என்ன பெரிய விஷயம் இருக்கின்றது  என நினைக்கின்றீ்ர்களா?  நண்பர் கையில் 5 பக்கங்களைக்  கொண்ட  வரிசைத் தாள்களை வைத்திருந்தார். என்ன அது என்று நான் வினவ, இதில் 300க்கும் மேற்பட்ட நமது TUT நண்பர்களின் பெயர்கள் இருந்தது. கணக்கு போட்டுக் கொள்ளுங்கள் எவ்வளவு நேரம் ஆகியிருக்கும் என்று. அர்ச்சகரும் ஆடிப் போய்விட்டடார்..

(..தன்னலத்தை விட பொது நலத்தை பெரிதும் விரும்பும் நமது நண்பருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்). பின்பு கோவிலைச் சுற்றியுள்ள  மற்ற விக்ரகங்களையும் தரிசித்தபின் மன நிறைவுடன் அங்கிருந்து புறப்பட்டோம். இக்கோவிலில் நமது உழவாரப்பணி கோரப்பட்டுள்ளது.  தற்சமயம் வெயில் காலம் என்பதால்  ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கோவில் திறக்கும் நேரம்:-
காலை: 7.00மணி முதல் 9.00 மணி வரை.
மாலை: 6.00மணி முதல் 7.30மணி வரை.
மேலும் அதிக தகவல்களுக்கு கோவில் நிர்வாக அலைபேசி எண்கள்:9444022133, 9841080017, 9444617508, 9940206679.