Subscribe

BREAKING NEWS

19 June 2017

பாவம் தீர்க்கும் வெள்ளியங்கிரி - தொடர்ச்சி

வெள்ளியங்கிரி

என்ன தான் இருக்கின்றது வெள்ளிங்கிரியில் ? மீண்டும் மீண்டும் நினைக்க தூண்டுகின்றது.
முக்தித் தலங்கள் என்றொரு வரிசை பற்றி கேட்டிருப்போம்.கண்டிப்பாக அனைவரும் முக்தித் தலங்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

 பிறக்க முக்தியளிப்பது - திருவாரூர்
 வாழ முக்தியளிப்பது - காஞ்சிபுரம்
இறக்க முக்தியளிப்பது - வாரணாசி (காசி)
தரிசிக்க முக்தியளிப்பது - தில்லை (சிதம்பரம்)
சொல்ல முக்தியளிப்பது - திருஆலவாய் (மதுரை)
கேட்க முக்தியளிப்பது - அவிநாசி
நினைக்க முக்தியளிப்பது -திருவண்ணாமலை

இந்த பட்டியலில் வெள்ளிங்கிரி இல்லை.ஆனால் ஏதோ ஒன்று இல்லை இல்லை . பற்பல விசயங்கள் அங்கே உண்டு.அவற்றை அனுபவித்தால் தான் புரியும். எம் பெருமானின் அருளாசியின் படி சென்ற வாரம் வெள்ளிங்கிரி தரிசனம் செய்தோம். அந்த தரிசன நிகழ்வை இங்கே பதிகின்றோம்.வாருங்கள் வெள்ளிங்கிரி செல்வோம்.

வெள்ளிங்கிரி பயணம் பூண்டியில் இருந்து தொடங்குகிறது. கோவை காந்திபுரத்திலிருந்து 
பூண்டிக்கு காலை 7 மணி முதல் பேருந்து வசதி உள்ளது. நாம் பூண்டி செல்வதற்கான பிரிவு சாலையில் இறங்கி விட்டோம்.( ஈஸா யோகா மையம் பேருந்து சென்றால் இங்கே தான் இறங்க வேண்டும்)





அங்கிருந்து சுமார் 2 கி,மீ  தூரம் நடந்தால் வெள்ளிங்கிரி மலை அடிவாரக்கோவில் அடையலாம். ஆட்டோ வசதி இருந்தும், மலை அடிவார பாதையை பார்த்ததும் துள்ளிக் குதித்தது மனது. எனவே நடை பயணமாக பூண்டி அடிவாரம் அடைந்தோம். இரு அன்பர்கள் உடன் பேசிக்  கொண்டே நடந்தோம். அவர்கள் வெள்ளிங்கிரி மலையை சுமார் 3 மணி  நேரத்தில் அடைந்து விடுவதாய் சொன்னார்கள். கேட்டதும் பிரம்மிப்பாய் இருந்தது.


மலை அடிவாரக் கோவில் படங்கள் தங்களுக்காக :





கோவிலின் உட்புறமாக சென்றோம். அங்கு தங்குவதற்கு சில மடங்கள் இருக்கின்றன. 
பின்பு சற்று இளைப்பாறினோம்.யாம் தங்கி இருந்த மடத்தில் தினசரி வழிபாடு செய்வதெற்கென இருந்த இடத்தில முருக பெருமானை கண்டு தரிசித்தோம். அதே நேரத்தில் யாத்திரிகள் அனைவருக்கும் 2 பாக்கெட் சாப்பாடு கட்டிக் கொண்டோம். மேலும் தேவைக்கு உகந்த பொருள்கள், சமைப்பதற்கு பாத்திரங்கள் என எடுத்து கொண்டோம். எங்களின் திட்டப்படி சனி இரவு வெள்ளிங்கிரி 7 ஆம் மலை அடைந்து,சிவ பெருமானை தரிசித்து, அங்கே இரவு தங்குவதாக திட்டமிட்டோம்.




மேலே காண்பது - மடத்தில் இருந்த பூஜை அறை 

ஆனைமுகனை தரிசித்த பின்பு,சனிக்கிழமை காலை 10:30 மணி அளவில், அடிவாரக்கோவில் தரிசனம்  முடித்தோம். அடிவாரக் கோவிலின்  உள்ளே நுழைந்ததும், வெற்றியின் நாயகன் விநாயகப் பெருமானை தரிசித்தோம். அவரை யொட்டியே நால்வர் பெருமக்கள் இருந்தனர். அவர்களையும் வணங்கினோம்.










அடிவாரக் கோவில் மூன்று சன்னதிகள் உடையது. முதலிலே பூண்டி விநாயகர், அடுத்து வெள்ளிங்கிரி ஆண்டவர், அவரை அடுத்து மனோன்மணி அம்மன்.பூண்டி விநாயகரை தரிசித்து விட்டு, வெள்ளிங்கிரி ஆண்டவரை வேண்டினோம், அடுத்த சன்னதியில் உள்ள சக்தியை வணங்கி விட்டு,திருநீறு இட்டு வெளியே வந்தோம். பார்ப்பதற்கே கொள்ளை கொள்ளும் அழகு, மலை அடிவாரம்,தென்றல் வீசிடும் காற்று, சுத்தமான தூய குளிர்ந்த நீர் என ரம்மியமாய் அடிவாரம் இருந்தது. மொத்தம் 9 நண்பர்கள் சேர்ந்து மலையேற்றம் தொடங்கினோம்.



கோவிலின் வலப்புறமாக மேலே என்ற ஆரம்பித்தோம். அங்கு சில விளக்க பலகைகள் இருக்கின்றது.



மேலே ஏற ஆரம்பித்தோம். அங்கு முதல் மலை படியேற்றம் ஆரம்பிக்கும் முன்பு, சிவ சக்தி சொரூபமாய் தாயும்,தந்தையும் வீற்று இருக்கின்றார்கள். அவர்களை மீண்டும் தொழுது,முதல் மலையில் என்ற ஆரம்பித்தோம்.



வெள்ளிங்கிரி முதல் மலையேற்றத்தை தொடங்கி விட்டோம். முதல் மலை முழுதும் கற்களால் ஆன படிக்கட்டுகள் இருந்தது. கொஞ்ச தூரம் நடந்த பின்பு தன கைத்தடி தேவை என புரிந்தது.வழியில்கிடைத்த மூங்கில் தடி ஒன்றை எடுத்து கொண்டோம். சுமார் 2000 படிகள் நடக்க வேண்டும் என்றுசொன்னார்கள். கேள்விப்பட்டவரை, முதல் மலை ஏறுவது சற்று கடினம் என்றார்கள். "சிவ சிவ" என்று மனதில் கூறிக்கொண்டே நடந்தோம்.சற்று தொலைவில் குகைக் கோவில் என்று ஒரு அறிவிப்பு  பாதையின் வலது புறமாக இருந்தது. அப்படியே வலது புறம் சென்றோம். சற்று தொலைவில் குகை ஒன்று தெரிந்தது. 



மேலே காண்பது முதல் மலையின் படிக்கட்டுகள்.



குகைக் கோவில் பற்றிய அறிவிப்பு பலகை.

குகையின் அருகில் சென்றோம்.ஒரே ஒரு ஆள் உள்ளே செல்லும் வண்ணம் இடம் இருந்தது.உள்ளே சென்றோம்.டீ தரிசித்தோம். அமைதியான சூழல்.இது தான் நாம் முதன் முதலாக குகை கோவில் பெறுகின்ற அனுபவம். பேரமைதியில் பெருமானின் தரிசனம்.சொல்லவா வேண்டும். நீங்களே பாருங்கள். உண்மை புரியும்.




மேலே ...குகைக் கோயிலின் வெளிப்புறத் தோற்றம் 




குகைக் கோயிலின் உள்ளே 


பின்பு வெளியே வந்த, மீண்டும் மலையேற ஆரம்பித்தோம். கால் சற்று வலிக்க ஆரம்பித்தது.சற்று தூரம் ஏற,ஏற மூச்சிரைத்தது. வாயின் வழியே மூச்சினை விட தோன்றியது. அப்போது வழியில் போவோர், வாயை மூடி, மூக்கின் வழியே மூச்சு விடவும் என்று சொன்னார்கள். ஓ ! இது தான் இயல்பான சுவாசமோ? தடம் புரண்ட வாழ்வில்..மூச்சு விடுவதும் ஒழுங்கில்லையே. வாயை மூடி பேசவும் என்பது போல், வாயை மூடி மீண்டும் முதல் மலையில் என்ற ஆரம்பித்தோம்.ஆங்காங்கே மூங்கில் காற்று வீசியது..ஸ்ஷ்ர்..ஸ்ஷ்ர் என்ற சப்தம் கேட்கும். பார்த்தால் மூங்கில்கள் ஒன்றோடரொன்று  உரசிக் கொண்டிருக்கும்.




அப்படியே நடந்து கொண்டிருந்த போது, முதல் மலை முடியும் இடம் எப்போது வரும் என்று எண்ண ஆரம்பித்தோம்.விநாயகர் கோவில் வந்தால் அது தான் முதல் மலையின் இறுதிக்கான இடம் என்றார்கள்.முதல் மலையை பிரணவ சொரூபம் என்று சொல்கின்றார்கள்.சரியாக 12:45 மணி அளவில் விநாயகர் கோவில் அடைந்தோம். அங்கு சுக்கு காபி,குளுக்கோஸ் வாங்க என்று ஒரு கடை இருந்தது.அந்த கடையில் நீர் வாங்கி அருந்தினோம். தூய நீர் குடிக்க,குடிக்க அப்படியொரு சுகானுபவம்.





வெள்ளை விநாயர் சன்னதி மற்றும் மலைப் பாதை தங்களின் பார்வைக்காக.


 முந்தைய பதிவிற்கு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_13.html

- அடுத்த பதிவில் இரண்டாம் மலை ஏறுவோம் 


No comments:

Post a Comment