Subscribe

BREAKING NEWS

17 September 2017

மண(ன)ப் பொருத்தம் - தொடர்பதிவு (2)

மணப் பொருத்தம் என்ற தொடர் பதிவில்

முந்தைய பதிவில் மனைவி நல வேட்பு! (Wife Appreciation!)  பற்றியும், இல்லாள் அகத்­தி­ருக்க இல்­லா­தது ஒன்­று­மில்லை! என்ற கூற்றின் மெய்த் தன்மை பற்றியும் உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகின்றோம்.

இந்த பதிவில் மனைவி நல வேட்பு! பற்றி ஒரு சிறிய கதை ஒன்றை இங்கே பகிர விரும்புகின்றோம். சிறிய கதை தான்..கதை சொல்லும் நீதியோ மிகப் பெரிது.




கிராமம் ஒன்றில் ஒரு கணவனும் மனைவியும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். வறுமை  அவர்களை வாட்டியது. ஒரு நாள் அந்த  மனைவி, தன் கணவனைப் பார்த்து வீட்டில் உள்ள காளை மாட்டைக் கொண்டு போய்ச் சந்தையில் விற்று அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஒரு பெட்டிக்கடை வைத்தால் குடும்பத்தை நகர்த்தலாமே என்று யோசனை கூறினாள். அவனும் உடன்பட்டு மாட்டை ஓட்டிக்கொண்டு சந்தைக்குச் செல்லும் சாலையில் நடந்தான். வழியில் மாடு அங்குமிங்கும் மிரண்டு ஓடியது.

அப்போது ஆடு ஒன்றை ஓட்டிக்கொண்டு வந்த ஒருவன்; அவனைப் பார்த்து; ஏனய்யா அந்த முரட்டுக் காளையுடன் சிரமப்படுகிறாய்! என்னிடம் கொடுத்துவிடு. அதற்குப் பதிலாக என் ஆட்டைத் தருகிறேன் என்றான். அறிவிற்குறைந்த அந்தக் கணவன் மாட்டைக் கொடுத்துவிட்டு ஆட்டை ஓட்டிக் கொண்டு சந்தையை நோக்கிச் சென்றான்.

எதிரேயொருவன் கையில் ஒரு பெட்டைக் கோழியுடன் வந்தான். அவன், அந்தக் கணவனை ஏமாற்றி கோழியென்றால் கையிலேயே தூக்கிக் கொண்டு போய்விடலாம் என்றதும், அதற்கும் அறிவிலிக் கணவன் ஒப்புக்கொண்டு ஆட்டை அவனிடம் கொடுத்துவிட்டுக் கோழியை வாங்கிக் கொண்டு சந்தைக்குப் புறப்பட்டான்.


போகும்போது ஒரு பிரியாணிக் கடை! அந்தக் கடைக்காரன் அந்தக் கோழியை வாங்கி அன்றைக்குச் சமைத்துவிடத் திட்டம் போட்டு அறிவிலிக் கணவனிடம் நயமாகப் பேசி, ஒரு குவளைத் தேநீருக்குக் கோழியை வாங்கிக் கொண்டான்.

அறிவிலிக் கணவன் தேநீரைக் குடிக்கும்போது அவன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரன் அவனைப் பார்த்து, ''அட முட்டாளே! நானும் உன்னைக் கவனித்துக் கொண்டு தான் வருகிறேன். மாட்டைக் கொடுத்து ஆட்டை வாங்கினாய் - ஆட்டைக் கொடுத்து கோழியை வாங்கினாய் - கோழியைக் கொடுத்து தேநீர் வாங்கிச் சாப்பிடுகிறாய் -இதையெல்லாம் உன் மனைவி அறிந்தால் உன்னைவிட்டு ஓடியேவிடுவாள்;அல்லது உன்னை அடித்துத் துரத்துவாள்'' என்றான்.

அறிவிலிக் கணவன், அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது என் மனைவியை அறிவேன்,  என்றான்.
தான் சொல்வதுதான் நடக்கும் என்றான் பக்கத்து வீட்டுக்காரன். நடக்குமா நடக்காதா என்பதற்கு இருவரும் பந்தயம் கட்டிக் கொண்டனர். நடந்தால் அறிவிலிக் கணவன் அவனது வீட்டைப் பக்கத்து வீட்டுக்காரனுக்கு எழுதி வைத்துவிடவேண்டும். நடக்காவிட்டால் பக்கத்து வீட்டுக்காரன், அவனது பெட்டிக்கடையை அறிவிலிக் கணவனுக்குத் தந்துவிடவேண்டும். இப்படிப் பந்தயம் கட்டிக்கொண்டு இருவரும் வீட்டிக்குத் திரும்பினர்.

அண்டை வீட்டுக்காரன் அறிவிலியின் மனைவியிடம் அவளது கணவன் செய்த முட்டாள்தனமான காரியங்களையெல்லாம் சொல்லி, கடைசியில் உன் கணவன் மாட்டோடு சென்று ஒரு கோப்பைத் தேநீருடன் திரும்பியிருக்கிறான் என்று கேலி செய்தான்.

அறிவிலியின் மனைவியோ; தன் கணவனைப் பார்த்து "அந்தத் தேநீரையாவது வயிறு நிரம்பச் சாப்பிட்டீர்காளா?'' என்று அன்பொழுகக் கேட்டாள்.
பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஒரே அதிர்ச்சி.



பந்தயத்தில் தோற்றுப்போய்ப் பெட்டிக் கடையை எழுதிக் கொடுத்துவிட்டான்.

மறுநாள் அந்த அறிவிலிக் கணவனை, அவன் பார்த்து, ''என்னடா  உன் மனைவி உன்னைவிட முட்டாளாக இருக்கிறாளே?' என்று கேட்டான்.

''அப்படியொன்றுமில்லை.என்னதான் அவளுக்கு என்மீது வருத்தமோ, கோபமோ இருந்தாலும் அதைப்பிறர் முன்னால்காட்டிக்கொள்ளமாட்டாள். நானும் அப்படித்தான் நடந்து கொள்வேன். அந்தத் தைரியத்தில்தான் உன்னிடம் பந்தயம் கட்டினேன்'' என்றான் அந்த அறிவிலிக் கணவன்.

"மனைவி நல வேட்பு நாள் (Wife Appreciation Day)" கொண்டாடும் மனவளக்கலை அன்பர்கள் இந்தக் கதையினைத் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள்.

"உன் கண்ணில் நீர் வழிந்தால்......" கவியரசரின் பாடல் நாம் அறிந்ததே, எனினும் மனைவியின் தியாகத்தைப் போற்றி  எத்தனை பேர் உணர்ந்து மதிக்கிறோம்?.

"கணவன், மனைவி இருவரும் ஒருவர் வினையை இன்னொருவர் கூட இருந்து தூய்மை செய்து வாழ்வதே இல்லறம். இருவரிடையே பிணக்கு வரக் கூடாது. மன அலையை குறைத்து தியானம் பழக அமைதி அலை நிலைத்து விடும், சிந்தனை சிறக்கும், வெறுப்பு உண்டாகாது. அன்பும், கருணையும் தழைக்கும்.சிறு தவறுகளை மன்னிக்கும் தன்மை மேம்படும். ஒருவருக்கொருவர் என்ன தேவையோ அதைச் செய்யும் மனம் உண்டாகும்" என்றும், சினம், கவலை, ஏமாற்றம் வெறுப்பு முதலியன வாழ்க்கைத் துணையை துன்பம் கொள்ளச் செய்வதை உணர்ந்து கணவன்மார் அனைவரும்  திருந்த வேண்டும் என்கிறார் மகரிஷி.

மனைவியைப் பற்றற்ற துறவி எனக் கூறிய மகான் அவர்.இதை எத்துனைபேர்  உணர்ந்து செயல்படுகிறோம் என்பதே இன்றைய கேள்வி!




மனைவியைப் போற்றும் வண்ணம் அவர் எழுதிய பாடல் இதோ:

   "பெற்றோரைப் பிறந்தகத்தைப்
   பிறந்த ஊரை விட்டுப்
   பிரிந்து வந்து பெருநோக்கில்
   கடமையறம் ஆற்றப்
  
   பற்றற்ற துறவியென
   குடும்பத் தொண்டேற்றுப்
   பண்பாட்டின் அடிப்படையில்
   எனைப் பதியாய்க் கொண்டாய்
   நற்றவத்தால் என் வாழ்க்கைத்
   துணையாகிப் பெண்மை
   நலநோக்கில் அன்போடு
   கருணையிவை கொண்டு
  
   மற்றவர்க்கும் தொண்டாற்றும்
   மாண்புமிக்க என்றன்
   மனைவியை நான் மதிக்கின்றேன்
   வாழ்த்தி மகிழ்கின்றேன்" 

மணப் பொருத்தம் இரு மனங்களுக்குள் நிகழ்ந்து மனப் பொருத்தம் கிடைத்திட சில டிப்ஸ் இங்கே தருகின்றோம்.படித்ததும் மறந்து விடாது, உங்களுக்கு பிடித்த ஒன்றை பின்பற்ற முயற்சி செய்யுங்கள்.

 மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள் :-





01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
02. மனது புண்படும்படி பேசக் கூடாது.
03. கோபப்படக்கூடாது.
04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
05. பலர் முன் திட்டக்கூடாது.
06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
08. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
09. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வேண்டும் பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.




கணவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று மேற்சொன்ன குறிப்புகள் சரியாக உணர்த்தி இருக்கும். தங்களிடம் ஏதாவது குறை இருந்தால்,அதனை நிறையாக மாற்ற முயலுங்கள்.
மனைவி கணவனிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதை அடுத்த பதிவில் கண்டு உணர்வோம்.


முந்தைய பதிவுகளுக்கு :-

மண(ன)ப் பொருத்தம் - தொடர்பதிவு (1) - https://tut-temple.blogspot.in/2017/08/1.html

மண(ன)ப் பொருத்தம் - தொடர் பதிவு - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_78.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (1) - http://tut-temple.blogspot.in/2017/07/1.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html

இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. 'வெற்றி' உங்களை தேடி வரும்..! - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_4.html

சிக்கல்களில் இருந்து சீக்கிரம் மீள்வோமா? - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_2.html

ஓடுவது முள் அல்ல...நம் வாழ்க்கை - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post.html

தாலாட்டு வேண்டுமா? தேசிய கீதம் வேண்டுமா? - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_51.html

இவ்வளவுதங்க குடும்பம்...! - http://tut-temple.blogspot.in/2017/04/blog-post_98.html

நட்பின் வலிமை - http://tut-temple.blogspot.in/2017/04/blog-post_55.html

ஆழ்மனத்தின் ஆற்றல் - http://tut-temple.blogspot.in/2017/04/blog-post_17.html

உருகி உருகி நான் பிராத்திக்கும் கடவுளிடம் ஒரு நாள் பேச சந்தர்ப்பம் கிடைத்தது... - http://tut-temple.blogspot.in/2017/04/blog-post_6.html

கடவுளை காட்டுங்க! - http://tut-temple.blogspot.in/2017/04/blog-post_24.html

சில நேரங்களில் சில மனிதர்கள்... - http://tut-temple.blogspot.in/2017/04/blog-post_14.html

கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்!!! - http://tut-temple.blogspot.in/2017/04/blog-post_13.html

கண்ணனுக்கு சொன்ன கதை - http://tut-temple.blogspot.in/2017/04/kannanukku-sona-kathai.html



No comments:

Post a Comment