Subscribe

BREAKING NEWS

16 November 2017

பஞ்சு வாழ்க்கையில் இருந்து விடுபடலாமே - உழவாரப் பணி அறிவிப்பு

அன்பார்ந்த உறவுகளே

இந்த பதிவில் நம் தளத்தின் உழவாரப் பணி அறிவிப்பு பற்றி பகிர உள்ளோம். இதற்கு முந்தைய பதிவுகளில் நாம் பல முறை உழவாரப் பணி பற்றி பேசி உள்ளோம். ஆனால் இன்னும் இந்த தொண்டின் அருமை பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம். இது நாம் வாழ்கின்ற காலத்தின் கட்டாயத் தேவையும் கூட. ஒவ்வொரு பழந்திருக்கோயிலாகச் சென்று பாருங்கள். புதிதாக திருக்கோயில்களை கட்டுவதை விடுத்தது, நம்மிடம் உள்ள பழம் பெருமை பேசும் திருக்கோயில்களை செப்பனிடுவதே இன்றைய தேவை.

அறிவிப்புக்கு முன்பு ஒரு சிறிய கதை ஒன்று.

ஒரு ஊர்ல..கதை என்றாலே ஒரு ஊர்ல தானே..பள்ளியின் தமிழ் ஆசிரியர் வரவில்லை. அதற்கு பதிலாக வாழ்க்கைக் கல்வி பாட பிரிவின் ஆசிரியர் அந்த வகுப்பிற்கு செல்கின்றார். வாழ்க்கைக் கல்வி  என்றொரு பாடமா? என்று திகைக்க வேண்டாம். உடற் கல்வி யோடு வாழ்க்கைக் கல்வி  என்றொரு வகுப்பும் இருந்தது. இப்போதெல்லாம் ஹ்ம்ம் ..என்னத்த சொல்ல..

சரி கதைக்கு வருவோம்.

அன்றைய வகுப்பிற்கு சென்ற வாழ்க்கைக் கல்வி ஆசிரியர், மாணவர்களிடம் எத்தனை வகையான வாழ்க்கை உண்டு ? என்று வினவினார். சில மாணவர்கள் வாழும் காலத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்து வாழும் வாழ்க்கை உண்டு என்று கூறினார்கள். உடனே அவர், மிக மிக சரி..இருப்பினும் நான் சற்று விளக்கமாக சொல்கின்றேன், இந்த விளக்கத்தை மனதில் இருத்துங்கள், உங்கள் நண்பர்கள், பெற்றோர்கள் என அனைவருக்கும் சொல்லுங்கள் என்றார்.

மீண்டும் அவர் நாம் இவ்வளவு அழகாக இருக்க எது உதவுகிறது என்றார்? உடை என்று மாணவர்கள் சொன்னார்கள். அதே உடையில் இருந்து வாழ்க்கையை பற்றி ஆரம்பிக்கலாமா என்றார். உடை எதிலிருந்து வருகின்றது? என்றார். பஞ்சிலிருந்து என்றனர் மாணவர்கள். மிகச் சரி. இப்போது வாழக்கையை பஞ்சிலிருந்து தொடங்குவோம் என்று கூறிவிட்டு, மீண்டும் பேசலானார்.


பொதுவாக நான்கு வகையான வாழ்க்கை  முறைகள் உண்டு.
1. பஞ்சு வாழ்க்கை
2. நூல் வாழ்க்கை
3. திரி வாழ்க்கை
4. ஆடை வாழ்க்கை

ஒவ்வொரு வாழ்க்கை முறையாக வாழ்க்கைக் கல்வி ஆசிரியர் விளக்கலானார், நாமும் விளக்கம் பெறுவோம்.

அதென்ன பஞ்சு வாழ்க்கை ? பஞ்சு எப்படிப் பட்டது? காற்றடித்தால் அங்கும்,இங்கும் பறக்கும், இப்படித்தான் இருப்பேன் என்று நிலையாக இருக்காது.அதேபோல் தான் சிலர் பஞ்சு வாழ்க்கை வாழ்கின்றனர்,ஏன் வாழ்கின்றோம், எதற்காக வாழ்கின்றோம் என்ற குறிக்கோள் இன்றி, காற்றடித்த திசையெல்லாம் பறந்து வாழக் கூடியவர்கள் இவர்கள்.

அடுத்ததாக நூல் வாழ்க்கை, பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கின்றோம், நூல் பஞ்சில் இருந்து உருவானாலும், அது பல வழிகளில் உதவுகின்றது, நூலின் உதவியால் ஆடை உருவாகின்றது, சில பொருட்களை கட்டுவதற்கு பயன்படுகின்றது, பஞ்சு வாழ்க்கையை விட நூல் வாழ்க்கை சற்று மேலானது அல்லவா?

நூலுக்கப்பறம், திரி வாழ்க்கை. அதென்ன திரி வாழ்க்கை, பல நூட்களை திரட்டி ஒன்றாக்கினால் திரி, திரியின் மூலம் விளக்கேற்றலாம், ஒளி கொடுப்பதற்கு திரி உதவுகின்றது, இருள் நீக்கும் வாழ்க்கை என்றால் அது திரி வாழ்க்கை, நூல் வாழ்க்கையில் இருந்து மேம்பட்ட வாழ்க்கை என்றால் அது திரி வாழ்க்கை, திரி வாழ்க்கை இல்லறத்தை நல்லறமாக்க உதவும் என்பது உறுதி.

கடைசியாக ஆடை வாழ்க்கை, பல நூல்களை நெய்து,தொகுத்து, நம் மானத்தை மறைக்கும் ஆடை வாழ்க்கை,இது மிக மிக மேம்பட்ட வாழ்க்கை, இது உயரிய அற வாழ்க்கை என்றும் கொள்ளலாம். நம் அகத்தை காட்டும் அழகு வாழ்க்கை.

இப்போது  சொல்லுங்கள் ..உங்களுக்கு எந்த வாழ்க்கை வேண்டும்? அனைத்து மாணவர்களும் ஆடை வாழ்க்கை என்றனர். ஆம்..உண்மை தானே..காற்றடித்தால் பறப்பதல்ல வாழ்க்கை. காற்றை எதிர்த்து திண்ணமாய் இருந்து மற்றவர்க்கு ஒளி கொடுப்பதே வாழ்க்கை.

நாமும் பல வகையான வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம், ஒரு நாள் பஞ்சு வாழ்க்கை, மற்றொரு நாள் நூல் வாழ்க்கை, திரி வாழ்க்கை என்று. ஆனால் சித்தர்கள், மகான்கள் அவர்களுக்கு பிடித்த ஒரே வாழக்கையை வாழும் போதும், வாழ்க்கைக்கு பிறகும் வாழ்கின்றார்கள்.இதுவே சித்தர்களின் சூட்சுமமும் கூட. பெரும்பாலும் நாம் பஞ்சு வாழ்க்கையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். பஞ்சு வாழ்க்கையில் இருந்து விடுபட்டு,  நூல்,திரி, ஆடை வாழ்க்கையெல்லாம் வாழ வேண்டாமா?

பஞ்சு வாழ்க்கையின் தரம் எப்படி என்றால், நாய் ஒன்று ஒன்றுமற்ற எலும்பை சுவைக்கும் போது உருவான காயத்தில் உள்ள ரத்தத்தை சுவைப்பது போலத் தான். எத்தனை நாளுக்குத் தான் இப்படி இருப்பது, மானிட பிறப்பின் மகத்துவம் அறிய வேண்டாமா? இந்த பஞ்சு வாழ்க்கையில் இருந்து விடுபட பல வழிகள் உண்டு, அந்த வழிகளில் நாம் சென்று வாழ வேண்டுமாயின், முதலில் நாம் மனதின் மனதை அறிய வேண்டும், மனதை அடக்காது , மனதை அறியப்  பழக வேண்டும். அறிந்த மனதில் விருப்பத்தை வைக்க வேண்டும், பிறகென்ன இந்த பிரபஞ்சமே நமக்கு நல்வழி காட்டும், பின்னர் நீங்கள் விரும்பிய நூல்,திரி, ஆடை வாழ்க்கை நாளும் வாழலாம்.

இதோ. பஞ்சு வாழ்க்கையில் இருந்து விடுபட ஒரு வழியை இங்கே காட்டுகின்றோம். அது உளம் ஆறச் செய்யும் உழவாரப் பணி. நம் தளத்தின் வருகின்ற உழவாரப் பணியில் வந்து பங்கு பெறுங்கள், பஞ்சு வாழ்க்கையில் இருந்து, நூல் வாழ்க்கைக்கு மாறுங்கள்.



இறை அன்பர்களே.
நமது TUT குழுமத்தின் உழவாரப்பணி குன்றத்தூரில்  உள்ள ஸ்ரீ நகைமுக வல்லி  சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில்  வருகின்ற 26/11/2017 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது.உழவாரப்பணியைத் தொடர்ந்து அபிஷேகம்,ஆராதனை நடைபெறும்.அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு தொண்டினை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.


நிகழ்வின் நிரல் 

உழவாரப்பணி 
அபிஷேகம்,ஆராதனை 
தீபாராதனை 
பிரசாதம் வழங்கல் 


நாள்:26/11/2017 ஞாயிற்றுக்கிழமை 

இடம் : ஸ்ரீ நகைமுக வல்லி  சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில்
           குன்றத்தூர் அடிவாரம் 
நேரம்: காலை 8 மணி முதல் 1 மணி வரை 

தங்களின் வருகையை கண்டிப்பாக உறுதி செய்ய தொடர்பு கொள்ளவும் 

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் ...

முந்தைய பதிவுகளுக்கு :-

எண்ணிக்கை முக்கியமல்ல...எண்ணங்களே முக்கியம்... உழவாரப் பணி அனுபவம் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_27.html

வாருங்கள்...உளம் ஆற உழவாரப் பணி செய்வோம் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_17.html

கணவன் மனைவியிடையே ஒற்றுமையும், அன்பும் ஓங்க ஓர் பரிகார ஸ்தலம்...- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_14.html

ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் அருள் பெற வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/07/blog-post_99.html

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் - உழவாரப் பணி அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_2.html

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html


பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html

காப்போம் வாருங்கள் - தமிழகத்தில் உள்ள ஒரே கரக்கோயில் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_7.html

நவராத்திரியில் நவரசங்கள் தரும் நவதரிசனம் - (9) - https://tut-temple.blogspot.in/2017/10/9.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html











No comments:

Post a Comment