Subscribe

BREAKING NEWS

15 January 2018

திருஊரகப் பெருமாளுக்கு செய்த உழவாரப் பணியும் ; அது அள்ளித் தந்த உற்சாகமும்

நம் தளத்தின் முக்கியமான சேவைகள் ஒன்று உழவாரப் பணி என்றால் அது மிகையாகா. 2017 ம் ஆண்டு
ஜூன் மாதம் பெருங்களத்தூரில் உள்ள சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமத்தில் ஆரம்பித்த இந்த சேவை எந்த ஒரு தடையுமின்றி மாதந்தோறும் தொடர்ந்து வருகின்றது என்றால் அது அவர்  அருள் தான்.

இன்று கந்தலீஸ்வரர் கோயிலில் செய்ய உழவாரப்பணியின் அனுபவத்தைக் கொடுக்க விரும்பினோம். ஆனால்அலைபேசியில் ஏற்பட்ட சில தொந்திரவால் காட்சிப் படங்கள் அனைத்தும் இல்லாமல் போய் விட்டது.அடுத்த முறை இது போன்று நிகழாத வண்ணம் பார்த்துக் கொள்கின்றோம். இப்போது தானே இங்கே அடியெடுத்து வைத்துள்ளோம். ஒவ்வொன்றும் நமக்கு ஒவ்வொரு அனுபவமே. இருப்பினும் அந்த உழவாரப் பணியின் நினைவுகள் நம் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ளது. வாய்ப்பு இருப்பின் காட்சிப் படங்கள் ஏதுமின்றி அந்த அனுபவத்தை தங்களுக்கு தர இறை அருள் புரியட்டும்.

21 தலைமுறைகளுக்கு தாங்களும், தங்கள் வம்சாவளியினரும் பேரின்பம் பெற்று மீண்டும் பிறவா நிலை எய்தி, சிவபுண்ணியம் ஈட்டி, சிவானந்தப் பெருவாழ்வில் திளைத்து இன்புற வேண்டின் உழவாரப்பணி செய்ய வாருங்கள். 21 தலைமுறைகளுக்கு என்றால், இந்த தலைமுறையும் சேர்த்துத் தான். ஆனால் என்ன? உடனே பேரின்பம் பெற இயலாது. ஒரு வீடு கட்ட வேண்டும் என்றால் நாம் எத்துனை திட்டம் தீட்டுகின்றோம், அஸ்திவாரம் முதல் அடுக்கு மாடி வரை, சமையல் அறை முதல் பற்பல அறைகள் வரை, சித்தாள் முதல் தொழில்நுட்ப வல்லுநர் வரை ( தற்போது வீடு புக் பண்ணுவது தான் நம் வேலை ) என்று பார்த்து பார்த்து கட்டுகின்றோம் என்றால், பேரின்பம் பெறுவதென்றால் சும்மாவா? ஒரே உழவாரப் பணியில் கிடைத்து விடுமா? என்ன..உழவாரப் பணி செய்து கொண்டே இருக்க வேண்டும்.வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

உழவாரப் பணியினை பொறுத்த வரையில் பலரும் உடல் உழைப்பை தருவது என்று நினைக்கின்றார்கள்.இது மிக மிக தவறான அணுகுமுறை. உழவாரப் பணியில் ஈடுபடும் அடியார்களுக்கு உடலாலும், உடலால் முடியவில்லை என்றால் பொருளாலும், பொருளால் முடியவில்லை என்றால் தம் நேரத்தை எப்படியாவது அவர்களுக்கு உபயோகமாகும் படி செலவழிக்க வேண்டும். உதாரணத்திற்கு உழவார செய்யும் போது, அவர்களுக்கு அருந்த நீர் கொடுப்பது, பொருட்களை பாதுகாப்பது, உழவார செய்த பின், பொருட்களை துடைத்து தருவது என்று சொல்லலாம்.

உழவாரப் பணிக்கும் வயதிற்கும் எந்த ஒரு சம்பந்தமும் துளி கூட இல்லை, ஒவ்வொருவரின் வயது, உடல் தெம்பு,தகுதிக்கு ஏற்ப நிச்சயம் உழவாரத்தில் பணிகள் உண்டு. எனவே வயதைப் பற்றி யோசிக்காது, பணியில் ஈடுபடுங்கள்.






இதோ திருக்கோயில் கோபுரம். கோபுர தரிசனம் கோடி புண்ணியமன்றோ ! இந்த பணியில் ஒரு மனநிறைவும் கிடைத்தது. அது பதிவின் கடைசியில். வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு நாம் நம்மால் இயன்ற பணியை இங்கு செய்தோம். மகளிர் அணியினர் பட்டையைக் கிளம்பிவிட்டார்கள். குழந்தைகளும் அருமையாக தங்கள் பணியை ஒரு விளையாட்டாக அவனுக்கு செய்தார்கள். நீண்ட நாள் கழித்து, திரு.மனோகர் மற்றும் அவர்தம் அன்பு குடும்பத்தினர் வந்திருந்தார்கள். கண்டு மகிழ்வுற்றோம்.





மகளிர் அணியினர் ஒவ்வொருவரும் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்று போட்டி போட்டுக் கொண்டு, தீப மேடை, பாத்திரங்கள் போன்றவற்றை சுத்தம் செய்யும் காட்சி .


 நம் குழுவின் புதிய அறிமுகம் இங்கே..திரு.பாபு அவர்கள். சதுரகிரி யாத்திரையில் நம்மோடு வந்தார். வந்தது மட்டுமின்றி, நம்முடன் இணைந்து , சேவையிலும் இதோ ஈடுபட்டு வருகின்றார். எட்டாத நிலையிலும், தூசிகளை எட்டித் துடைக்கும் காட்சி





அலங்காரப் பிரியருக்கு பூக்கள் சொல்லவும் வேண்டுமா?  கோயிலில் ஆங்காங்கே இருந்த பூக்களை ஒருங்கே சேகரிக்கும் திருமதி.பரிமளம் 









திரு மனோகர் ஐயா அவர்கள் நீர் ஊற்றி உதவும் காட்சி.



சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா ! என்பது போல் தான் இந்த உழவாரப் பணியை பற்றி எழுதும் போதே நமக்கே மகிழ்ச்சி பொங்குகின்றது.


நம்முடன் புதியதாய் இணைந்த திரு.ஆதி ஐயா அவர்கள். இவரை முருகன் அடிமை என்றே சொல்லலாம். வல்லக்கோட்டை முருகனின் தீவிர பக்தர். புதிதாய் அன்று வந்து பணியில் இணைந்தாலும், என் கடன் பணி செய்து கிடப்பதே  என்று உணர்ந்து, கோயிலின் மேலே உள்ள சுவற்றில் ஒட்டடை அடித்து சுத்தம் செய்தார்.




கோயில் ஓரத்தில் சுத்தம் செய்த பிறகு ..நீங்களே பாருங்கள்.



நெய் குப்பிகளை அனைத்தும் ஒரு சேர அள்ளி,  ஒரே சாக்கில் போடும் காட்சி




கோயிலின் பிரகார சன்னிதிகள் ஒவ்வொன்றாக கழுவும் காட்சி


இது போல் , சொல்லிக் கொண்டே போகலாம். அவ்வளவு பணிகள். அனைத்தும் மன நிறைவாய் செய்து முடித்தோம்.






திருமயிலையில் இருந்து வந்த திருமதி அருணா அவர்கள் சில பாத்திரங்களைத் தேய்த்த காட்சி.









படங்கள் அதிகமாக இருப்பதால், தூய்மை செய்த பின்பு நடைபெற்ற நிகழ்வின் துளிகளை அடுத்த பதிவில் தருகின்றோம்.

- மீண்டும் அடுத்த பதிவில் உழவார அனுபவம் தொடரும்.



No comments:

Post a Comment