Subscribe

BREAKING NEWS

01 March 2018

அன்னதானம் கொடுப்பது அனைத்தையுமே கொடுப்பதாம்

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் - ம(மா)கேஸ்வர பூசை பற்றி சென்ற மாத பதிவில் கண்டோம். இன்றைய பதிவில் அங்கே இது நாள் வரை நடந்த அன்னசேவையின் நிகழ்வின் துளிகள் காண உள்ளோம். அதற்கு முன் சில வார்த்தைகள்.

இருப்பின் பசியாற்று; இல்லையெனில் பரிமாறு என்ற கூற்றுக்கு இணங்க, பொருளாதார வசதி படைத்தவர்கள் அன்ன சேவை செய்க; இல்லையெனில் இது போன்ற சேவையில் ஈடுபட்டு தம் உழைப்பை,நேரத்தை செலவு செய்வதும் ஒரு வகையில் தானமே.

அன்னதானம் செய்தால் நமது மும்மலங்கள், அறியாமை, அகந்தை (தான் என்ற கர்வம்) போன்ற குணக்கேடுகள் நம்மை விட்டு விலகி விடும். இறை ஆசி கிட்டும். அன்னதானம் செய்தால் நற்பண்புகள் கைகூடும் அன்னதானம் செய்தால் அறிவு மலரும். அன்னதானம் செய்தால் துன்பங்கள் தீரும்.

தானத்தில் சிறந்தது அன்னதானம் என்கிறது தர்மசாஸ்திரம். 


அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் 
பெற்றான் பொருள்வைப் புழி.(226) 

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை 
மாற்றுவார் ஆற்றலின் பின்.(225) 

திருக்குறளும் அன்னதானத்தின் அருமைகளை அறிவிக்கின்றன. 

கீதையில் கிருஷ்ணபகவான், “ எவன் தனக்காக மட்டும் ஆகாரம் தேடிச்சாப்பிட்டுக் கொள்கிறானோ அவனுடைய பாபத்தை, முழுக்க அவனேதான் அனுபவித்தாக வேண்டும் வேறு எவரும் அதில் பங்கு எடுத்துக்கொள்ள மாட்டார் என்கிறார்”. 

நம்மிடம் இருக்கும் பொருளை மற்றவர்க்கு ஈந்து – கொடுப்பவரும், பெறுபவரும் மகிழ்ச்சி அடைவதால் ஏற்படும் – பெரும் புண்ணியம் பெறுவதற்கான புனிதச் செயல். 





வாழ்க்கைக்கான அத்தியாவசிய தேவையான உணவை மற்றவர்க்கு தானமாக அளிப்பதே அன்னதானம் ஆகும். அன்னதானம் அளவற்ற புண்ணியத்தினை நல்கும். பணம், காசு, வஸ்திரம், நகை, பூமி, வீடு போன்ற மற்றப் பொருட்களையெல்லாம் தானமாகக் கொடுத்தாலும், பெறுபவர், இன்னும் கொஞ்சம் அதிகம் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் தோன்றச் செய்யும். ஆனால், அன்னதானம் செய்தால் மட்டுமே போதும் என்ற சொல்லை தானமாகப் பெறுபவரிடமிருந்து கொண்டு வரும். ஆகையாலே பூரணமான தானம் – அன்னதானம் மட்டுமே ஆகும். 




அன்னத்தை துவேஷிக்கக் கூடாது. அன்னத்தை மிகுதியாக உண்டாக்க வேண்டும். அன்னத்தை வேண்டி வந்த எவருக்கும் இல்லை என சொல்லக் கூடாது. 

உதரம் (வயிறு) நிறைந்து, உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் ஈரேழு ஜன்மங்களையும் தொடர்ந்து வரும். அன்னதானம் மட்டுமே செய்தவரை மட்டும் சென்றடையாமல், செய்தவரின் சந்ததியினரையும் காத்துத் தொடரக் கூடியது. 

மற்ற எந்தத் தானம் செய்யினும் யாரையும் போதுமென்ற அளவுக்குத் திருப்தி்ப்படுத்த முடியாது. எத்தகைய பசியாக இருப்பினும் ஒரு எல்லையில் போதுமென்று கூறுவர். மற்ற எந்தத் தானங்களையும் விட அன்னதானம் என்னும் உயிர்காக்கும் தானம் மிக உயர்வான அறமாகும். 




அன்னதானம் செய்வோம் இன்புற்று வாழ்வோம். தினசரி சுமார் 75 சாதுக்களுக்கு மேலாக 
ம(மா)கேஸ்வர பூசை செய்து இங்கே அன்னம் இட்டு வருகின்றார்கள். இதோ அவர்கள் கொடுக்கும் உணவுப் பட்டியல் இட்லி,தோசை,சாம்பார்,சட்டினி,கோதுமை உப்புமா,முள்ளங்கி சட்டினி
சில நாட்களில் இட்லி,பொங்கல்,சாம்பார்,கத்திரிகாய் பஜ்ஜி என வகை வகையாகவும் நடக்கின்றது.இந்தப் பதிவில் அதிகளவில் படங்களை இணைத்துள்ளோம். பொறுமையாக பார்க்கவும்.






மாலை உணவு தயார் செய்த நிலையில் மேலே நீங்கள் காணும் காட்சி. மாலை சுமார் 50 சாதுக்களுக்கு ஆசிரமத்திலும், சுமார் 100 சாதுக்களுக்கு திருஅண்ணாமலை கோயில் வாசலிலும் வழங்கி வருகின்றார்கள்.
























மேலே நீங்கள் பார்ப்பது மகேஸ்வர பூசை நிகழ்வின் துளி ஆகும். எந்த வித அவசரமின்றி, ஆத்மார்த்தமாக
ஒவ்வொரு சாதுக்களையும் சிவனாக பாவித்து ...இல்லையில்லை...சிவனாக்கி...தட்சணை கொடுத்து, மலர் சூட்டி, தூப தீபம் காட்டுகின்றார்கள்.




அட...மகேஸ்வர பூசையின் போதே...வஸ்திர தானம் செய்யலாம் . 

































எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதியை வணங்கி, வள்ளலாரின் ஆசியிலும், சித்தர்களின் அன்பும்,கருணையைக்
கொண்டு இங்கே தினசரி மகேஸ்வர பூசை நடைபெற்று வருகின்றது.
























நம்மிடம் பொருளாதார வசதி இருந்தால், நம்மால் இது போன்ற அன்ன சேவை, மகேஸ்வர பூசை செய்ய முடியும்  என்று எண்ண வேண்டாம் . இங்கே பொருளாதாரத்தை விட, இறைவனின் அருளாதாரமே வேண்டும். இது போன்ற சேவை செய்வதற்கு அருளே நிச்சயம் நமக்கு வேண்டும். நாம் மாதந்தோறும் செய்கின்ற அன்னசேவைக்கு குறைந்தது ஒரு மாதம் முன்னதாக திட்டமிடல் வேண்டும். இது போன்று பல செய்திகளை நாம் கருத்தில் கொண்டு செய்ய வேண்டும். மாதம் ஒருமுறை நிகழ்விற்கு இப்படி என்றால், தினமும் அன்ன சேவை, மகேஸ்வர பூசை என்றால்...அப்பப்பா...நினைத்தாலே மெய் சிலிர்ப்பூட்டும். ஆனால் இதை நித்திய தொண்டாக ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஸ்ரீ சரவணபவா சுவாமிகள் செய்து வருகின்றார். இந்தப் பதிவின் மூலமாக, இங்கே அவருக்கு நம் தளம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் விபரங்களுக்கு:


ஸ்ரீ சரவணபவா சுவாமிகள், ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம், கிரிவல பாதையில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் அருகில், திருவண்ணாமலை, செல்: (0)9944800220 (இந்த எண்ணில் தொடர்பு கொண்டு மகேஸ்வர பூஜை செய்ய பதிவு செய்து கொள்ளலாம்)

மீள்பதிவாக :

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் - ம(மா)கேஸ்வர பூசை - http://tut-temple.blogspot.in/2018/01/blog-post_24.html

No comments:

Post a Comment