Subscribe

BREAKING NEWS

06 March 2018

மனமது செம்மை யாக அகத்தியர் பூசை தானே

சென்ற வாரம் 28/2/2018 அன்று நடைபெற்ற அகத்தியர் ஆயில்ய பூசை பற்றிய தொகுப்பை இங்கே வெளியிடுகின்றோம். பிப்ரவரி 28 புதன் காலை 9 மணி அளவில் நமக்கு அகத்தியர் ஆயில்ய பூசை செய்ய உத்தரவானது. நாம் செவ்வாய் இரவில் பூசைக்கு தேவையான சில  விபூதி, குங்குமம்,மஞ்சள்,நெய்,பத்தி ,கற்பூரம் போன்ற பொருட்கள் வாங்கினோம். நம்மைப் பொருத்தவரையில் அன்றிரவே நாம் பூசைக்கு தயார் ஆகிவிட்டோம்.





காலையில் இரண்டு இளநீர் வாங்கிவிட்டு, கோயிலை 9 மணி அளவில் அடைந்தோம். பின்னர் பொருட்களை வைத்து விட்டு, மூத்தோனை வணங்கி விட்டு, அகத்தியர் சந்நிதி அடைந்தோம். பஞ்சாமிர்தம் செய்வதற்கு ஆயத்தம் செய்தோம். அப்போது குருக்கள் தாமே தயார் செய்வதாக உரைத்து, தயார் செய்தார்கள்.

சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம்
சகலவுயிர் சீவனுக்கு மதுதா னாச்சு;
புத்தியினா லறிந்தவர்கள் புண்ணி யோர்கள்
பூதலத்தில் கோடியிலே யொருவ ருண்டு;
பத்தியினால் மனமடங்கி நிலையில் நிற்பார்
பாழிலே மனத்தை விடார் பரம ஞானி;
சுத்தியே யலைவதில்லைச் சூட்சஞ் சூட்சம்
சுழியிலே நிலையறிந்தால் மோட்சந் தானே.




சரி. இனி நாம் தீபம் ஏற்றலாம் என்று முடிவு செய்து,அகல்களை எடுத்து வைத்து, நெய் ஊற்றிக் கொண்டிருந்தோம். அஷ்டதிக்கு தீபம் ஏற்ற தயாரிப்படுத்திக்கொண்டிருந்தோம். அப்போது தான் நம் குழுவின் உறுப்பினர் சுபாஷினி அவர்கள் சரியாக கோயிலை அடைந்தார்கள். நமக்கு சற்று இன்ப அதிர்ச்சி தான். பின்னர் அவர்களை தீபம் ஏற்ற சொன்னோம். அப்போது தான் தெரிந்தது அரிசி மாவு வாங்கி வரவில்லை என்று. சுபாஷினி அவர்களை தீபம் ஏற்ற சொல்லி விட்டு, நாம் கடைக்கு சென்று அரிசி மாவு வாங்க சென்றோம்.வாங்கி வந்த பின்பு, அஷ்ட தீபம் ஏற்றியதைக் கண்டு மகிழ்ந்தோம். தீபங்கள் பேசுவதை கேட்டோம்.

மோட்சமது பெறுவ தற்குச் சூட்சஞ் சொன்னேன்
மோசமுடன் பொய்களவு கொலை செய்யாதே;
காய்ச்சலுடன் கோபத்தைத் தள்ளிப் போடு
காசினியிற் புண்ணியத்தைக் கருதிக் கொள்ளு;
பாய்ச்சலது பாயாதே பாழ்போ காதே
பலவேத சாஸ்திரமும் பாரு பாரு;
ஏச்சலில்லா தவர்பிழைக்கச் செய்த மார்க்கம்
என்மக்கா ளெண்ணி யெண்ணிப் பாரீர் நீரே.



சிறிது நேரம் கழித்து, குருக்கள் அபிசேகம் ஆரம்பித்தார். ஒவ்வொரு அபிஷேகம் கண்டு மகிழ்ந்தோம்.

பாரப்பா நால்வேதம் நாலும் பாரு
பற்றாசை வைப்பதற்கோ பிணையோ கோடி;
வீரப்பா ஒன்றொன்றுக்கு கொன்றை மாறி
வீணிலே யவர்பிழைக்கச் செய்த மார்க்கம்;
தேரப்பா தெருத்தெருவே புலம்பு வார்கள்
தெய்வநிலை ஒருவருமே காணார் காணார்;
ஆரப்பா நிலைநிற்கப் போறா ரையோ!
ஆச்சரியங் கோடியிலே யொருவன் தானே!




மஞ்சள் அபிஷேகம் செய்த நிலை கண்டு, மனம் மகிழ்ந்தோம். தீபாராதனை கண்டு தித்திப்பை உணர்ந்தோம்.

ஒருவனென்றே தெய்வத்தை வணங்க வேணும்
உத்தமனாய்ப் பூமிதனிலிருக்க வேணும்;
பருவமதிற் சேறுபயிர் செய்ய வேணும்
பாழிலே மனத்தை விடான் பரம ஞானி;
திரிவார்கள் திருடரப்பா கோடா கோடி
தேசத்திற் கள்ளரப்பா கோடா கோடி;
வருவார்க ளப்பனே அனேகங் கோடி
வார்த்தையினால் பசப்புவார் திருடர் தானே.





தானென்ற தானேதா னொன்றே தெய்வம்
தகப்பனுந் தாயுமங்கே புணரும்போது
நானென்று கருப்பிடித்துக் கொண்டு வந்த
நாதனைநீ எந்நாளும் வணங்கி நில்லு;
கோனென்ற திருடனுக்குந் தெரியு மப்பா
கோடானு கோடியிலே யொருவ னுண்டு,
ஏனென்றே மனத்தாலே யறிய வேணும்
என்மக்காள் நிலைநிற்க மோட்சந் தானே.






சந்தன அபிஷேகம் சந்தோஷத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது.


மோட்சமது பெறுவதற்குச் சூட்சங் கேளு
முன்செய்த பேர்களுடன் குறியைக் கேளு!
ஏய்ச்சலது குருக்களது குலங்கள்கேளு
எல்லாருங் கூடழிந்த தெங்கே கேளு;
பேச்சலது மாய்கையப்பா வொன்று மில்லை
பிதற்றுவா ரவரவரும் நிலையுங்காணார்;
கூச்சலது பாளையந்தான் போகும் போது
கூட்டோடே போச்சுதப்பா மூச்சுத் தானே.











பஞ்சாமிர்த அபிஷேகம் பார்த்தோம். தேனினினை ஊற்றி தரிசனம் கண்ட போது  நம் ஊன் உருகியது, உள்ளொளி பெருகியது.

மூச்சொடுங்கிப் போனவிடம் ஆருங் காணார்
மோட்சத்தின் நரகாதி யிருப்புங் காணார்;
வாச்சென்றே வந்தவழி யேற்றங் காணார்
வளிமாறி நிற்குமணி வழியுங் காணார்;
வீச்சப்பா வெட்டவெளி நன்றாய்ப் பாரு
வேதங்கள் சாத்திரங்கள் வெளியாய்ப் போச்சே;
ஆச்சப்பா கருவுதனில் அமைந்தாற் போலாம்
அவனுக்கே தெரியுமல்லா லறிவாய்ப் பாரே;






பாவங்கள் தொலைக்கின்ற பால் அபிஷேகம் கண்டோம்.



பாரப்பா வுலகுதனிற் பிறவி கோடி
படைப்புகளோ பலவிதமாய்க் கோடா கோடி;
வீரப்பா அண்டத்திற் பிறவி கோடி
வெளியிலே யாடுதப்பா வுற்றுப் பாரு;
ஆரப்பா அணுவெளியி லுள்ள நீதான்
ஆச்சரியம் புழுக்கூடு வலைமோ தப்பா
கூரப்பா அண்டத்திற் பிண்ட மாகும்
குணவியவா னானக்காற் சத்திய மாமே.








தனங்கள் தருகின்ற தயிர் அபிஷேகம் 


சத்தியமே வேணுமடா மனித னானால்
சண்டாளஞ் செய்யாதே தவறிடாதே;
நித்தியகர் மம்விடாதே நேமம் விட்டு
நிட்டையுடன் சமாதிவிட்டு நிலைபே ராதே;
புத்திகெட்டுத் திரியாதே; பொய்சொல் லாதே
புண்ணியத்தை மறவாதே; பூசல் கொண்டு
கத்தியதோர் சள்ளிட்டுத் தர்க்கி யாதே
கர்மியென்று நடவாதே கதிர்தான் முற்றே.






இன்பங்கள் காட்டுவிக்கும் இளநீர் அபிஷேகம் 

மனமது செம்மை யானால் மந்திரஞ் செபிக்க வேண்டா;
                                    மனமது செம்மை யானால் வாயுவை வுயர்த்த வேண்டா;
                                    மனமது செம்மை யானால் வாசியை நிறுத்த வேண்டா;
                                    மனமது செம்மை யானால் மந்திரஞ் செம்மை யாமே.







என் அகத்தில் வாழும் ஈசனே..அகத்தீசனே..என்று உச்சி முதல் உள்ளங்கால் வரை சிலிர்ப்பு தந்த சந்தன அபிஷேகம் 

உண்ணும்போ துயிரெழுத்தை வுயர வாங்கி
உறங்குகின்ற போதெல்லா மதுவே யாகும்;
பெண்ணின்பா லிந்திரியம் விடும்போ தெல்லாம்
பேணிவலம் மேல்நோக்கி அவத்தில் நில்லு;
திண்ணுங்கா யிலைமருந்து மதுவே யாகும்
தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார்
மண்ணூழி காலமட்டும் வாழ்வார் பாரு
மறலிகையில் அகப்படவு மாட்டார் தாமே.






வினை நீக்கும் விபூதி அபிஷேகம். இந்த அபிஷேகம் தொடங்கிய போதே அகத்தியர் போற்றி,சித்தர் போற்றி என்று போற்றத் தொடங்கினோம். போற்றினால் நமது வினை அகலுமப்பா. மூல மந்திரத்தை உச்சரித்தோம். கருணை விழியைக் கண்டோம்.பொதிகை நாயகன் கூடுவாஞ்சேரி வந்து விட்டார் என்று எங்களுக்குத்  தோன்றியது. அருட்பெருஞ்ஜோதியாய் கருணாகரனை கண்ட பூசை.

ஒண்ணான உச்சிவெளி தாண்டி நின்று
உமையவளுங் கணபதியு முந்தி யாகி
விண்ணொளியாம் அம்பரம்ஓம் அவ்வும் உவ்வும்
விதித்தபரம் ஒருவருக்கு மெட்டா தப்பா!
பண்ணான உன்னுயிர்தான் சிவம தாச்சு
பாற்கடலில் பள்ளிகொண்டான் விண்டு வாச்சு;
கண்ணான கணபதியைக் கண்ணில் கண்டால்
கலந்துருகி யாடுமடா ஞானம் முற்றே;








சித்தருக்கெலாம் சித்தனே. அகத்தின் ஈசனே. அறியா பயணம் மேற்கொள்ளும் எங்களை வழிநடத்தும் உம்மை போற்றுவதே எங்களின் பாக்கியம். அபிஷேகப் பிரியனாக கண்ட ஈசனை, அலங்கார பிரியனாக கண்டோம். நம் குழு உறவுகள் அனைவர்க்கும் சங்கல்பம் செய்து பிரார்த்தனை செய்தோம்.

மூலமதை யறிந்தக்கால் யோக மாச்சு
முறைமையுடன் கண்டக் கால் வாதமாச்சு;
சாலமுடன் கண்டவர்முன் வசமாய் நிற்பார்
சாத்திரத்தைச் சுட்டெறிந்தாலவனே சித்தன்;
சீலமுள்ள புலத்தியனே! பரம யோகி
செப்புமொழி தவறாமல் உப்பைக் கண்டால்
ஞானமுள்ள எந்திரமாஞ் சோதி தன்னை
நாட்டினால் சகலசித்தும் நல்கும் முற்றே.


பூசை முடித்து, பிரசாதம் பெற்றுக் கொண்டு அகத்தியரிடம் நன்றி சொல்லிவிட்டு நகர்ந்தோம்.

- அடுத்த பதிவில் மீண்டும் இணைவோம்.

மீள்பதிவாக:-

கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 28/2/2018 - http://tut-temple.blogspot.in/2018/02/2822018.html








No comments:

Post a Comment