Subscribe

BREAKING NEWS

29 April 2018

வெள்ளியங்கிரி யாத்திரை -2018

அனைவருக்கும் வணக்கம்.

நாம் ஏற்கனவே பல முறை கூறி இருக்கின்றோம். மலை யாத்திரை நம் மன யாத்திரை. சீழ் பிடித்து,பொசுங்கி, வக்கிர எண்ணங்களோடு இருக்கும் மனதை செம்மைப் படுத்தி, அந்த பரம்பொருளிடம் சரணாகதி அடைவதே மலை யாத்திரையின் நோக்கம். இது ஒரே யாத்திரையில் கிடைத்து விடுமா என்றால் ? இல்லை என்பதே பதிலாக இருக்கும். மலை யாத்திரை முடிந்ததும் நாம் மீண்டும் இயல்பு வாழ்க்கையில் இணைகின்றோம். எனவே மீண்டும் நம் உடல்,உயிர்,மனம் எனும் பாத்திரம் அழுக்கு பிடித்து விடுகின்றது. இந்த பாத்திரத்தை மீண்டும் கழுவ கோயில்,குளம், யோகா, மலையாத்திரை என மீண்டும் செல்ல வேண்டி உள்ளது. சென்ற ஆண்டு வெள்ளியங்கிரி ஆண்டவர் தரிசித்து வந்தோம். இந்த ஆண்டு எப்போது என்று வழி மேல் விழி வைத்து காத்திருந்தோம். அந்த இனிய நாளும் வந்தது.


அடிவாரக்கோயிலை அடைந்து அனைவரும் மூத்தோனை வணங்கினோம்.




அடுத்து வெள்ளிங்கிரி ஆண்டவர் சந்நிதி சென்றோம். வழக்கமாக அஷ்ட திக்கு விளக்கேற்றி வழிபாடு செய்தோம். முருகனுக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. இதை விட நமக்கு என்ன வேண்டும்?






மனோன்மணி தாயார் தரிசனம். நால்வர் தரிசனம் என முடித்து விட்டு, வெளியே வந்து அன்றைய தினம் அமாவாசை அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தோம். உணவு வந்ததுடன், அனைவரும் காலை உணவை முடித்தார்கள். மதிய உணவிற்காக ஒரு உணவு பொட்டலம், சப்பாத்தி என ஒவ்வொருவருக்கும் இரு பொட்டலங்கள் கொடுத்து விட்டு, மேலிருந்து கீழே இறங்கும் அடியார்களுக்கு உணவு கொடுத்தோம்.



அடுத்து மலையேற தடி தயார் செய்து ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டது.


அனைவரும் யாத்திரைக்கு தாயார் நிலையில் இருந்தார்கள். சுமார் 40 உணவு பொட்டலங்கள் அங்கு கொடுத்தோம், மனதிற்கு நிறைவாக இருந்தது. ஒவ்வொரு முறை நம் அமாவாசை அன்னதானம் ஒவ்வொரு விதமாக நடைபெறுகின்றது.கூடுவாஞ்சேரி என்றால் சுமார் 10 பொட்டலங்கள் என்ற அளவில் இருக்கும். ஆனால் இங்கு சுமார்  40 பேருக்கு உணவு எனும் போது, மனநிறைவாக இருந்தது. பின்னர் அனைவருக்கும் சில வழிகாட்டும் செய்திகள் வழங்கப்பட்டது.


அடிவாரத்தில் மீண்டும் ஒருமுறை வணங்கி விட்டு, நடக்க ஆரம்பித்தோம். சுமார் 15 பேர் இம்முறை யாத்திரையில் இணைந்து இருந்தார்கள். முதல் மலையில் அனைவரும் சந்திக்கலாம் என்று சொல்லி அவர்களின் சக்திக்கேற்ப சென்று கொண்டிருந்தார்கள். நம்முடன் புதிதாக போளூரில் இருந்து திருமதி உமா தம்பதியராக வந்து இருந்தார்கள். சுமார் 3 மாதத்திற்கும் மேலாக அலைபேசியில் தான் பேசிக்கொண்டு இருந்தோம். யாத்திரையில் இணைந்தது மகிழ்ச்சியாக இருந்தது.


முதல் மலை ஏறும் போதே அனைவருக்கும் கஷ்டமாக இருந்ததை நாம் கண்டோம். அப்படியே மெல்ல மெல்ல சென்று கொண்டிருந்தோம். நாம் கடைசியாக திருமதி உமா அவர்களை கூட்டிக் கொண்டு சென்றோம். முதல் மலை முழுதும் படிகள் தான். நல்ல உயரமான படிகள். கால்களை நன்கு தூக்கித்தான் வைக்க வேண்டும். காலின் பலமே இங்கே மனதின் பலமாக இருக்கும். காலை 10:30 மணிக்கு ஆரம்பித்த யாத்திரை  பிற்பகல் சுமார் 12 மணி அளவில் முதல் மலையில் இருந்தது. நம்முடன் தம்பி வினோத் இணைந்து கொண்டார். அப்படியே இரண்டாவது மலை வரை அந்த பரம்பொருளே நம்மை கூட்டி சென்றார். 



இதோ. பாம்பாட்டி சித்தர் குகை கண்டோம். நன்றாக தரிசித்தோம்.








இறங்கி வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லவில்லை.ஏனெனில் இறங்கி வரும் போது சூழ்நிலை நமக்குத் தெரியாது.எனவே கொண்டு சென்று நெய்யை அங்கிருந்த அகலில் ஊற்றி, தீபமேற்றி, ஒவ்வொருவராக உள்ளே சென்று தியானித்தார்கள். நம் TUT குழுவின் உறவுகள் அனைவருக்குமான பிரார்த்தனை செய்யப்பட்டது.





மனம் அங்கிருந்து அகலவில்லை.  இருப்பினும் வெளியே வந்து மீண்டும் யாத்திரை தொடர்ந்தோம்.

- வெள்ளியங்கிரி யாத்திரை தொடரும்.

முந்தைய பதிவுகளுக்கு:-

ஈர்த்தெம்மை ஆட்கொண்ட எந்தை பெருமாளே! - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_11.html

இப்பிறப்பில் உன்னைக் காண்கின்றோம் - வெள்ளியங்கிரி ஈசா ! - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_51.html

வெள்ளியங்கிரி ஈசன் தரிசனம் கிடைக்குமா? - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_3.html

வெள்ளியங்கிரி ஈசனே! நீயே துணை - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_28.html

இன்பத்தை அள்ளித்தரும் வெள்ளியங்கிரி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_15.html

பாவம் தீர்க்கும் வெள்ளியங்கிரி - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_19.html

மனதை வெளுக்கும் வெள்ளியங்கிரி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_13.html


No comments:

Post a Comment