Subscribe

BREAKING NEWS

11 April 2018

ஈர்த்தெம்மை ஆட்கொண்ட எந்தை பெருமாளே!


TUT தள  வாசகர்களே...

அனைவருக்கும் வணக்கம். எந்தை பெருமானின் ஆசியுடன் நம்மை ஈர்த்தார். வெள்ளியங்கிரி யாத்திரை முடிவானது. வழக்கம் போல் அனைத்தும் அந்த ஈசனிடம் கொடுக்கப்பட்டது. நம் உறவுகளோடு முதல் யாத்திரையாக பர்வதமலை சென்றோம். சுமார் 6 முதல் 7 பேர் இருந்திருப்பார்கள். அடுத்து சதுரகிரி யாத்திரை. என தொடர்ந்தோம். இந்த வெள்ளியங்கிரி யாத்திரை ஐந்தாம் யாத்திரை.

1. பர்வத மலை
2. ஓதி மலை
3. சதுரகிரி
4. அத்திரி மலை
5 .வெள்ளியங்கிரி

என கடந்த ஓராண்டில் ஐந்து யாத்திரைகள். அனைத்தும் அவன் அருளாலே தான். அவன் அருளின்றி தூண் அல்ல, துரும்பு கூட அசையாது. இதோ யாத்திரையின் நிகழ்வின் துளிகளை இங்கே பகிர்கின்றோம். ஏற்கனவே நம் தளத்தில் வெள்ளியங்கிரி தொடர்பதிவாக தந்துள்ளோம். மீண்டும் மீள்பதிவாக பதிவின் இறுதியில் படித்துப் பார்க்கவும்.


வெள்ளியங்கிரி அடிவாரம் அடைந்து அனைவரும் அடிவாரக்கோயிலில் தரிசனம் பெற்றோம். அன்றைய  தினம் அமாவாசை என்பதால் நாம் வழக்கமாக செய்யும் அன்னதானம் அங்கே செய்ய பணித்தோம். மலை இறங்கி வரும் அடியார்களுக்கு உணவு கொடுத்தது ..நமக்கு திருப்தியாக இருந்தது.


அன்னதானம் முடித்து மலை ஏற்றம் ஆரம்பம். வழக்கம் போல் நாம் கூறிய படி, வெள்ளியங்கிரி மலை ஏற்றம் நம் மனதில் இறை அனுபவத்தை மாற்றும். மன உறுதி கொடுக்கும்.




இரண்டாம் மலை முடிவில் காணப் பெறும் பாம்பாட்டி சித்தர் குகை. சித்தர் தரிசனம் இங்கே கண்டிப்பாக கிடைக்கும் என்பது உறுதி. அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். ரமண மகரிஷி வழியில் சொல்வதானால், பாத்திரத்தை காலியாக வைக்க வேணும். காலியாக இருந்தால் தான் கிடைக்கும் இறையருளை நாம் பாத்திரத்தில் பிடிக்க முடியும். ஆனால் நாம் காலியாக வைப்பதும் இல்லை, இறையருளை உணர்வதும் இல்லை. பிறகு நம்மை நாமே நொந்து கொண்டு, நமக்கு மட்டும் இறையருள் கிடைப்பதில்லை என புலம்புகின்றோம்.




மூன்றாவது மலை ஏற்றம் ...முதுகை வளைத்து,..மனதையும் வளைக்க செய்யும். மனது மட்டுமா? மூச்சும் அல்லவா? இங்கே வளைகின்றது.



அழகின் சிரிப்பில்.இயற்கையின் வனப்பில்.நம்மிடம் சிலர் கேட்டதுண்டு. அப்படி என்ன தான் இருக்கின்றது மலை யாத்திரையில் என்று? இதோ. இந்த அழகும் ,வனப்பும் , கோடி கொடுத்தாலும் நமக்கு கிடைக்குமா? மலை யாத்திரையில் தான் இது சாத்தியம்.




ஏழாவது மலை ஏறிக் கொண்டு இருந்த நிகழ்வில். இதோ அடைந்து விட்டோம்





தரிசனம் முடித்து விட்டோம். ஈர்த்தத்தினால் தான் நாம் இங்கே நிற்கின்றோம்.


இதுதான் ஆட்கொள்ளும் நிலையோ என்று தோன்றியது.












மலை யாத்திரையின் போது தன்னலம் கருதாது, பிறர் நலம் கருத்தில் கொண்டு உணவு எடுத்துச் செல்லுங்கள். நாம் கண்டிப்பாக எந்த மலை யாத்திரையிலும் ஆஞ்சநேயர் தரிசனம் பெற இயலும்.


இதோ மீண்டும் மலை யாத்திரை பற்றி சிறு குறிப்புகளை இங்கே பகிர்கின்றோம்.


தூய காற்று - உடலளவில் சிறிதேனும் மாற்றம் இருக்கும். நம்மால் தான் இதனை உணர முடியாது.

தூய நீர் - குளியல் - உடல்/மன பிணி அகற்றும்...சில இடங்களில் மூலிகை நீர், மலை இருந்தாலே அருவி இருக்கும்.

கலப்படமற்ற ஐம்பூதம் - நிலம்,நெருப்பு, விண் இவையும் தூயதாய்

பசுமை ..கண்ணுக்கு மட்டுமல்ல..மனதிற்கும்

மலையேற்றம் - உடல் வலு மற்றும் மன வலு

மலையேற்றம் - சுவாசத்தை வாசித்து வாசி யோகம்

தூய அர்ச்சனை இலை எளிதாக

இயற்கையோடு இணையும் எளிதான நுட்பம்.

வாழ்வின் புரிதல்- மலை உச்சியில் இருந்து கீழே பார்த்தால், நாமும் தூசி, நம்மிடம் உள்ள பிரச்சினைகளும் தூசி என்று தெரியும்.

ஆதி மனிதர்கள் மலை வாழ் மக்களே. எனவே மலைகளில் கோயில் கட்டினர். காலப்போக்கில்
மலையிலிருந்து நகர தொடங்கியதும், மற்ற இடங்களிலும் கோயில் கட்ட ஆரம்பித்தனர்.

இவற்றையெல்லாம் விட, தனிமை - சும்மா இரு எனும் தாரக மந்திரத்தை உணர்த்தவே மலைக் கோயில்கள்.


என் சிற்றறிவுக்கு எட்டியது. பிழை இருப்பின் பொறுத்தருள்க. வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு அரோகரா!

- மீண்டும் அடுத்த பதிவில் இணைவோம்.

சென்ற ஆண்டு வெள்ளியங்கிரி அனுபவம் இங்கே மீள்பதிவாக

மீள் பதிவாக:-

இப்பிறப்பில் உன்னைக் காண்கின்றோம் - வெள்ளியங்கிரி ஈசா !  - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_51.html

வெள்ளியங்கிரி ஈசன் தரிசனம் கிடைக்குமா? - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_3.html

வெள்ளியங்கிரி ஈசனே! நீயே துணை - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_28.html

இன்பத்தை அள்ளித்தரும் வெள்ளியங்கிரி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_15.html

பாவம் தீர்க்கும் வெள்ளியங்கிரி - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_19.html

மனதை வெளுக்கும் வெள்ளியங்கிரி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_13.html

No comments:

Post a Comment