Subscribe

BREAKING NEWS

16 April 2018

ஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் பொற்பாதம் சரணம்

அன்பின் உறவுகளே..

அனைவருக்கும் வணக்கம். இந்த பதிவின் மூலம் ஒரு திருக்கோயிலை பற்றி அறிய இருக்கின்றோம். சில பதிவுகளுக்கு முன்பாக நாம் இப்படி குறிப்பிட்டு இருந்தோம்.


கூடுவாஞ்சேரி அருகில் உள்ள ஆதனூரில் அகத்தீஸ்வரர் கோயில் உள்ளதாகவும், அங்கு நேற்று கும்பாபிஷேகமும் நடைபெற்றுள்ளது. இதனைத் தான் நாம் குருவருள் என்கின்றோம். வாழ்விக்க வந்த வள்ளல் அகத்தியர் பெருமான் பொற்பாதம் சரண் சரணம்.

ஆம்...நமக்கு மிகப் பெரும் ஆச்சர்யமாக இருந்தது. இரண்டு ஆண்டுக்கு மேலாக நாம் கூடுவாஞ்சேரி மாடம்பாக்கத்தில் வசித்து வருகின்றோம். ஆதனூர் அகத்தீஸ்வரர் கோயில் பற்றி அறியவில்லை என மன ஏக்கம் இருந்தது.நமக்கு செய்தி கிடைத்த அன்றே விசாரிக்கத் தொடங்கினோம். ஆட்டோ ஓட்டுநர்களிடம் விசாரித்து, மறுநாள் காலை செல்லலாம் என்று கூறி சென்றோம்.ஆனால் மறுநாள் காலை செல்ல முடியவில்லை. பின்னர் ஒரு நாள் வார விடுமுறை கிடைத்தது.

பழம் நழுவி பாலில் விழுந்தது போல் நமக்கு இருந்தது. உடனே ஆதனூர் அகத்தீஸ்வரர் தேடிப் புறப்பட்டோம்.மாடம்பாக்கத்தில் இருந்து கூடுவாஞ்சேரி செல்லும் வழியில் ஆதனூர் நோக்கி  சென்றோம். அங்கு கோயிலின் பெயர் வேறாக இருந்தது. இருப்பினும் எல்லாமே அவனாயிற்றே..தரிசனம் பெற சென்றோம். புலி வேட்டைக்கு சென்றால் முயல் கிடைத்த கதை என்று சொல்வது போல் நாம் இந்த கோயிலை கருதவில்லை. அனைத்தும் ஒன்றே..




இங்கு ஒரு ஸாயி பாபா திருக்கோயில் பிரசித்தம் என்றும் சொன்னார்கள். நாம் சென்றது அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் சமேத அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில். கயிலைநாதன் தரிசனம் என்றதும் மனம் துள்ளிக் குதித்தது.



                                            தூரத்தில் இருந்து திருக்கோயிலின் அழகு


பார்ப்பதற்கு சின்ன கோயில் போல் இருந்தது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையுமா என்ன? கோயிலின் வனப்பில் அந்த சொக்கனைப் பார்த்து சொக்கிப் போனோம்.குருக்கள் இங்கே புதிதாக நியமிக்கப்பட்டமையால் தல வரலாறு தெரியவில்லை.













திருக்கோயிலின் சுற்றுச் சுவர்களில் ஒவ்வொரு திருமுறையில் இருந்தும் சில பாடல்கள் தொகுத்து இருந்தார்கள். காண்பதற்கே அழகாய் இருந்தது. செக்க செவேரென சிவப்பு வண்ணத்தில்..அழகோவியமும் கருத்தோவியமும் ..நீங்களே பாருங்கள்.





















ஆடல் வல்லான் தரிசனம் எப்படி? மற்றொரு வாய்ப்பு கிடைத்தால் தல வரலாற்றோடு மீண்டும் தரிசிப்போம்.பின்னர் மீண்டும் ஆதனூர் அகத்தியர் தேடி புறப்பட்டோம். அவரை தரிசித்து அருள் பெற்றோம். எப்போது ஆயில்ய பூசைக்கு நம்மை அழைப்பாரோ? என்று அவரிடம் விண்ணப்பம் செய்து விட்டு வந்தோம். சில நாட்களுக்கு முன்னர் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் இருந்தபோது, கோயில் குருக்கள், இந்த ஆதனூர் அகத்தியர் பற்றி கூறினார். நாம் இப்போது தான் தரிசித்து வந்தோம் என்று கூறி, நம் விண்ணப்பத்தை கூறினோம். ஏதாவது ஒரு விடுமுறை நாளில் ஆயில்ய நட்சத்திர வரும் போது, அங்கே ஆயில்ய ஆராதனை செய்வோம் என்று கூறியது நம்மை இன்னும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.

எப்படியோ, இன்றைய பதிவில் அற்புத தரிசனம் பெற்று இருப்பீர்கள் என்று நம்புகின்றோம்.

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

No comments:

Post a Comment