Subscribe

BREAKING NEWS

24 August 2017

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி

மனக்குறைகள் நீக்கிய  குழந்தைவேலர் கோவில்

இன்றைய பதிவில் நாம் நம் உறவுகளோடு, மயிலாப்பூர் குழந்தைவேலர் கோவிலில் செய்த உழவாரப்பணி அனுபவத்தை அறிய இருக்கின்றோம். என் கடன் பணி செய்து கிடப்பதே என்று கூறி வாழ்வின் ஆதாரமாக உழவாரம்  இருக்க வேண்டும் என்று பறைசாற்றியவர் திருநாவுக்கரசர்.திருக்கோயில்களில் சிதறிக் கிடக்கும் குப்பைக் கூளங்களைப் பெருக்கிச் சுத்தம் செய்து, கல் முள் அகற்றிச் சீர்படுத்தும் சேவையான உழவாரப் பணியை முதன்முதலில் தொடங்கியவர் திருநாவுக்கரசர்( அப்பர் சுவாமிகள்தான்). அவரின் வழியில், உழவாரப் பணி திருத்தொண்டில் ஈடுபட்டு, இறைப்பணி ஆற்ற நமது TUT குழுமமும் சிரமேற்கொண்டு வருகின்றது.

நாம்  கடவுள் பணியில் ஈடுபட்டிருப்பதற்கான மூலகர்த்தா, நடமாடும் தெய்வமா கடந்த நூற்றாண்டுல வாழ்ந்த காஞ்சி மகா பெரியவாதான். ‘புதுசு புதுசா கோயில்களைக் கட்டுறதுக்குப் பதிலா, சிதிலம் அடைஞ்சிருக்கிற எத்தனையோ கோயில்களைச் சரி பண்ணி, பூஜை பண்ணினாலே மகா புண்ணியம்’னு காஞ்சி மகான் அடிக்கடி சொல்லுவார். அவரது வார்த்தையை வேதமா எடுத்துக்கிட்டோம். இதோ மூன்றாவது உழவாரப் பணியை இங்கே சொல்ல விழைகின்றோம்.

இம்முறை நடந்த உழவாரப்பணி மிக சீரும் சிறப்போடும் நடந்து, அனைவரது மனக்குறைகளை நீக்கியிருக்கும் என்று நம்புகின்றோம்.நாம் அறிவிப்பு செய்த செய்தியைப் பார்த்து, இரு அன்பர்கள் புதிதாய் வந்து, நம்மை ஆச்சர்யக் கடலில் மூழ்கடித்தார்கள்.மேலும் இரு உறவுகள் வந்திருந்து பணியை திறம்படச் செய்தார்கள்.     

எல்லாம் செயல்கூடும் என்னாணை யம்பலத்தே 
எல்லாம்வல் லான்ற னையே ஏத்து. 

என்ற வணக்கத்தைக் கூறி இங்கே  சாலப் பொருந்தும். இம்முறை நான்கு மழலைச் செல்வங்கள் கலந்து கொண்டு எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்கள். பணியின் நிறைவில் குழந்தைவேலருக்கு நடைபெற்ற அபிஷேகம்,அர்ச்சனை,ஆராதனை என்று கண்டு மெய் சிலிர்த்துப் போனோம்.

மாதம் ஒருமுறை உழவாரப்பணி மனதில் ஒரு மகிழ்ச்சியையும்,உத்வேகத்தையும் அளிக்கின்றது.நமது நட்பு வட்டம் விரிவடைகிறது.மாதமொரு யேனும் அவனின் உறைவிடம் சென்று,வேண்ட முடிகின்றது.உடம்புல அயர்ச்சியும் மனசுல வலியுமா நிறையப் பேர் வாழ்ந்துட்டிருக்கோம். அவங்க ஒரேயொரு முறை உழவாரப் பணியில ஈடுபட்டா போதும்… மனசே மலர்ச்சியாயிடும்! மொத்த வலியும் காணாம போயிடும்.  இது தான் நமக்கு கிடைத்துக் கொண்டிருக்குகின்ற அனுபவம்.கடவுள் பணியில ஈடுபடுறதும், அவர் குடியிருக்கிற கோயிலைச் சுத்தம் செய்யறதும் நமக்குக் கிடைச்ச பாக்கியம். கோடி ரூபா கொடுத்தாக்கூட கிடைக்காத நிம்மதி!  இந்த தொண்டில் நமக்குக் கிடைக்கின்றது.

ஐபோனும், ஆண்ட்ராய்டும்,இணையமும் ஆட்சி புரிகின்ற காலத்தில் விஞ்ஞானம் அசுரத்தனமா வளர்ந்திருக்கு. ஆனாலும், தஞ்சைப் பெரியகோயில் மாதிரி ஒரு கோயிலை அத்தனை நேர்த்தியா இப்ப நம்மால கட்ட முடியுமா? இதுமாதிரியான புராதனமான கோயில்களை நம்மால கட்ட முடியாட்டாலும், பராமரிக்கவாவது செய்யலாமே? பாதுகாக்கலாமே? கோயில்களைச் செப்பனிடறதும், சீர்படுத்துறதும் நம்ம கடமை!”  இது தான் இன்றைய கால கட்டத்தின் தேவையும்.நம் வசிப்பிடத்திலும் இது போல் ஏராளமான கோவில்கள் உள்ளது.இவற்றை எல்லாம் பாதுகாப்பதும் நம் கடமை.

பிறவியிலேயே கண்பார்வை இழந்த தண்டி அடிகள், நமக்கெல்லாம் மிகச் சிறந்த ரோல்மாடல்! பார்வை இழந்த தண்டி அடிகளே உழவாரப் பணியில் ஈடுபட்டிருந்தார்னா, நாமெல்லாம் எம்மாத்திரம்? இந்த உடம்பு இருக்கிற வரை, உடம்புல உசுரு இருக்கிற வரை இறைப் பணி செய்து கிடப்பதே என் கடன்னு நினைச்சு வாழ்ந்தோம்னா, வாழ்க்கை நிம்மதியா சந்தோஷமா இருக்கும். சொல்லப்போனா, அதுதான் உண்மையான வாழ்க்கை!

 கடவுளுக்குச் சேவை செய்ற பாக்கியம் கிடைச்சது புண்ணியம்.  புண்ணியத்தை இந்த உழவாரப் பணியில் செய்து பெற்றுக் கொண்டார்கள்.

உழவாரப் பணி அன்று காலை சுமார் 9:00 மணி அளவில் மைலாப்பூரை அடைந்தோம்.அப்போது திரு.சந்திரசேகரன் அண்ணன் தொடர்பு கொண்டு,விஜயன் அவர்கள் மயிலாப்பூரில் உள்ளதாக அலைபேசியில் சொன்னார்.உடனே அவரை தொடர்பு கொண்டு, மயிலாப்பூர் கோவில் குளம் அருகே இருப்பதாக சொன்னோம்,உடனே நம் அன்பர்கள் ஒவ்வொருவராக அங்கே இருப்பதாக சொன்னார்கள்.திருமதி.மாலதி,திருமதி.சசிகலா,திருமதி.தாமரை என அனைவரும் சேர்ந்து கோவிலுக்கு சென்றோம்.

அங்கே ஏற்கனவே இருவர் பணிக்காக வந்திருந்தனர்.அவர்களைக்  கண்டு மகிழ்ந்தோம்.திருமதி அருணா மற்றும் திருமதி ரேவதி. இப்படியே ஒவ்வொருவராக  சேர்ந்தார்கள்.அன்று சித்திரக்குளத்திலும் உழவாரப் பணி  நடந்து கொண்டிருந்தது. உடனே குருக்களின்  சென்று, சாவி வாங்கி வந்து,கோவிலைத் திறந்து விட்டோம்.அனைவரிடமும் இந்தக் கோவில் அளவில்  சிறியது,எனவே  பணி குறைவாக இருக்கும் என்று அங்கே,சொல்லிவிட்டு  விட்டோம்.குருக்களும் தங்களால் என்ன பணிகள் செய்ய முடியுமோ,அவற்றை செய்யும் படியும்,தாம் சுமார் மதியம் வருவதாகவும் கூறினார்.

மகளிர் படை தாயாரானதும், என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்று ஒரு குறிப்பு எடுத்துக்கொண்டோம்.பக்கத்தில் உள்ள கடைத்தெருவுக்கு சென்று,தேவையானதுடைப்பம்,பூந்துடைப்பம்,பீதாம்பரி,புளி போன்ற பொருட்களை வாங்கி கொடுத்து விட்டு,பணிகளை செய்ய தாயாரானோம். என்று நினைத்துத் தான் பணியைத் தொடங்கினோம்.ஆனால் பணியின் இறுதியில் தான் தெரிந்தது.கோவிலில் உள்ள பணியின் தரமே முக்கியம்.இந்த பதிவைப் படிக்கும் அன்பர்கள்,படித்து கோவிலுக்கு செல்லும் போது, அங்குள்ள குப்பையை எடுத்து போட்டாலோ, விபூதியை எடுத்து வருவதற்கு கையோடு காகிதம் எடுத்து சென்றாலோ,அதுவே இந்த பதிவின் நோக்கம்.முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.நேரம் கிடைத்தால் குழுவோடு இணைந்து செய்யுங்கள்.இல்லையென்றால் தம்மால் முடிந்த பணிகளை குருக்களிடம் கேட்டு வாங்கி, செய்யுங்கள்.தற்போது விநாயகர்  விழா வருகின்றது.

வழக்கம் போல்,விடுமுறை தினம் என்று நினைத்து தொ(ல்)லைக்காட்சி பெட்டி முன்பு நாள் முழுதும் கழிப்பதை குறையுங்கள்.இப்போது ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் அலுவல வேலையில் இருப்பார்கள்.எனவே முகம் காட்டி பேசுவது அரிதான காலமிது.அன்றொரு நாளாவது அனைவரும் சேர்ந்து வீட்டில் இருக்க பழகுங்கள்.தினமும் ஒருமுறை யேனும் சேர்ந்து உண்ண பழகுங்கள்.இவையெல்லாம் ஏதோ புதிய விஷயங்கள் அன்று.காலங்காலமாக நம் முன்னோர் வாழ்ந்த வாழ்வியல் முறை. நாம் தான் மறந்து விட்டோம். இது போன்ற  பண்டிகை நாட்களில் கோவிலுக்கு சென்று, குருக்களிடம் கேட்டு,இயன்ற பணியை செய்யுங்கள்.சரி! உழவாரப் பணியின் அனுபவத்திற்கு வருவோம்.





முதலில் நந்தியம்பெருமானையும்,அவரைச் சுற்றியுள்ள எண்ணெய் பிசுக்குகளையும் அகற்ற ஆரம்பித்தார்கள்.படத்தின் பின்னே,பார்த்தீர்களா? மழலைச் செல்வங்களின் பணியை.இது போன்று பணிகள் செய்து வளர்க்க செய்ய,முளையிலே தயார் செய்ய வேண்டும்.இவர்களின் பெற்றோரை கட்டாயம் பாராட்டியே ஆக வேண்டும்.விடுமுறை நாட்களில் பீச்,சினிமா என்று செல்லாமலே தங்கள் குழந்தைகளுக்கு இது போல் மேன்மை கொள் சைவ நீதி பரப்புதல் நம் கடன் அன்றோ.

திரு.ராஜ்குமார் அவர்கள் வந்த உடன்,அவரே நந்தி மற்றும் ஏனைய தெய்வங்களையும் பார்த்துக்கொள்வதாக சொன்னார்.உடனே கடைக்கு சென்று கடலைமாவு  வாங்கி வந்து,சுத்தம் செய்ய ஆரம்பித்து விட்டார்.நீங்களே பாருங்கள்.






மகளிர் அணியினர் சும்மா இருப்பார்களா  என்ன? விலக்கி,கழுவ வேண்டிய பொருட்களை அவர்கள் எடுத்துக் கொண்டார்கள்.மற்றவர்கள் நூலாம்படை, வெளிப்புற பிரகார தூய்மை என எடுத்துக் கொண்டனர்.வேலை முழு வீச்சில் தொடங்கி விட்டது.சிறார்களும்,தூணை சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.உள்பிரகாரம் சென்று,சில விளக்குகளை  கொடுத்தோம்.

சிலர் கோவிலின் மேலே ஏறி தூய்மை செய்தனர்.இவ்வாறு ஒவ்வொருவரும் அவர்களால் முடிந்த பணியைக் கையிலெடுத்துக் கொண்டார்கள்.கருமமே கண்ணாயிரு என்பது போல்,கோவிலின் உள்,வெளிப் பகுதிகளில் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.


                                           கோவிலின் மேலே ஏறி சுத்தம் செய்கிறார்


       
                                        திரு.நாகராஜன் ஏகாம்பரம் சுத்தம் செய்யும் காட்சி






         


 நம் நல விரும்பி திரு.அரவிந்த் ஜனார்த்தனன் அவர்கள் கோவிலை சுற்றியுள்ள புற்களை பிடுங்கி அப்புறப்படுத்தவத்தை மேலே நீங்கள் காண்கின்றீர்கள்.சுமார் 10 மணி அளவில் ஆரம்பித்த பணி 12:30 வரை சென்று கொண்டிருந்தது.குருக்கள் வீட்டிலிருந்து தேநீர்,பிஸ்கட் கொடுத்தார்கள்.இந்த  வேலையை யாம் செய்தோம்.மேலே ஏறியவர்கள் அங்கே,பயன்படுத்த இயலா டயர்கள் உள்ளதை சொன்னார்கள்.நாம் குருக்களுக்கு தொடர்பு கொண்டு பேசி விட்டு,அவற்றை கீழே இறக்கி போடுமாறு கேட்டோம்.



                                                 பட்டயைக் கிளப்பும் மகளிர் அணியினர்

தேநீர் இடைவேளை தாண்டி, மேலும் சுறுசுறுப்பாக பணிகள் நடைபெற்றது.சிறிய கோவில் தானே? பணிகள் குறைவாகத் தான் இருக்கும் என்று நாம் நினைத்தோம்.ஆனால ஒவ்வொன்றாக பார்த்து ,பார்த்து தொடர்ந்து கொண்டே இருந்தோம்.கோமுகி தீர்த்தம் வருகின்ற இடம்,சரியாக வெளியே செல்லாது இருந்தது.நாகராஜன் ஏகாம்பரம் அவர்கள் அதனை சரி செய்து விட்டார்கள்.











                                      மண் வெட்டி பிடித்து களைகளை நீக்கும் வினோத்குமார்



கோவிலின் வெளிப்பிரகாரத்தில் ஒரு செடியானது காய்ந்து,சருகுகளாக இருந்தது.அதனை அன்பர் விஜயன் சுத்தம் செய்து, அங்கிருந்த உயிர்ப்பான செடியை சரி செய்து,தண்ணீர் ஊற்றினார்.




அனைத்தும் சுத்தம் பிறகு,குருக்கள் வருவற்கு முன்பாக,கோவிலின் உள் பிரகாரத்தை தண்ணீர் ஊற்றி அலம்பி விட்டார்கள்.அந்த காட்சியை  மேலே பார்த்துக் கொண்டு உள்ளீர்கள்.உழவாரப்பணி முடித்த பின்பு,கீழே உள்ள படங்களே நம் சேவையின் தரத்தினை சொல்லும்.ஏனென்றால் நாம் இது போன்ற தொண்டில் ஈடுபடும் போது,நம்மால் சிறிதளவேனும் அவர்களுக்கு உதவுவது போல்,பணி முடித்துக் கொடுக்க வேண்டும்.இல்லையேல்,உழவாரப் பணியின் நோக்கம் மாறுபடும்.


தண்ணீர் வராது இருந்த பாதையை சரி செய்யப்பட்ட பின்பு 







 இந்த இடத்தில் கோவில் செல்ல ஒரு பெயர் பலகை இருந்தால் நன்றாக இருக்கும்.இந்த படத்தை நன்கு குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.


பளபளக்கும் பூஜை பொருட்கள்.இவை மட்டுமா? நம் உள்ளக் கசடுகளும் நீங்கி,நாங்களும் பளபள என்று  மனதில் ஜொலிக்க ஆரம்பித்தோம்.









                                       பணிக்கு பின்பு நந்தியம்பெருமானின் அழகில்

இப்படி ஒவ்வொரு பணியாய்,அதுவும் மன நிறைவாய் செய்து முடித்தோம்.குருக்கள் வந்து விட்டார்.பின்பு வெளியே சேகரித்த குப்பைகளை அப்படியே சாக்கில் அள்ளி வெளியே கொட்டினோம்.அப்போது தான் கோவிலின் பெயர் பலகை இருந்த இடத்தைக் கவனித்தோம்.
அங்கே ஒரே குப்பைகள் இருந்தது.அவற்றை அப்புறப்படுத்தலாம் என்று முதலில் முடிவு செய்தோம்.அவற்றை சுத்தம் செய்த பின்னர்,அங்கே இரு பெயர் பலகை இருந்தது.ஒரு பலகையை எடுத்து,வெளியே உள்ள மெயின் ரோட்டில் வைக்கலாம் என்று திரு.சந்திரசேகரன் கூறினார்.உடனே செயல்படுத்த தொடங்கினோம்.













இப்போது பாருங்கள்.வெளியே கோவிலின் பெயர் பலகையை வைத்தாயிற்று.ஏற்கனவே இருந்த இடத்தையும் சுத்தம் செய்தாயிற்று.மன நிறைவு பெற்றோம் என்று தான் சொல்ல வேண்டும்.குருக்கள் வந்த உடன் ஏதேனும் செய்ய வேண்டுமா?என்று கேட்டோம்.ஏனெனில் நாம் ஏதேனும் பணிகள் நம் பார்வையில் விட்டிருப்போம்.அவரும் பார்த்து விட்டு, மன நிறைவு என்று சொன்னார்.நேரம் சரியாக 1 மணி இருக்கும்.





பணியை முடித்த பிறகு,வேறென்ன? அவரின் தரிசனம் பார்க்க காத்திருந்தோம். குருக்கள் அனைத்தையும் தயார் செய்தார்.பின்பு அனைவரையும் உள்ளே அழைத்தார்.சிறிய கோவில் என்பதால், வெளியில் இரு புறமும் அன்பர்கள் அமர்ந்து கொண்டனர்.ஒவ்வொருவராக தங்களுக்கு தெரிந்த பாடல்கள்,துதிகள் என பாடத் தொடங்கினர்.அனைத்தும் மகிழ்வாய் இருந்தது.சிவபுராணம்,லிங்காஷ்டகம் என சொல்ல வேண்டுமா? கேட்க,கேட்க செவிக்கு உணவாய் இருந்தது.


                                                திரு.நாகராஜன் ஏகாம்பரம் குடும்பத்தினர்


                                     திருமதி தாமரை அவர்களும்,அவர் தம் மகனும்





என்ன .அன்பர்களே.பார்க்கவே பரவசமாக உள்ளதா? நேரில் அனுபவித்த இன்பம் இருக்கின்றதே.எல்லாம் குழந்தைவேலரின் அருள் தான்.பால்,தயிர்,பஞ்சாமிர்தம்,விபூதி என ஒவ்வொரு அபிஷேகமாக களை கட்டியது.ஆற,அமர அருள் பெற்றோம்.குருக்களும் எந்த ஒரு அவசரமுமின்றி,மெதுவாக அபிஷேகம் செய்தார்கள். உள்ளம் உருகியது.அன்பு ஊற்றெடுத்தது. என உணர்ந்து கொண்டிருந்தோம்.







ஒவ்வொருவராக சங்கல்பம் செய்யும் காட்சி மேலே கொடுத்துள்ளோம்.ஜாதகத்தை மாற்றும் குழந்தைவேலர். ஜாதகத்தை சாதகமாக்கும் இவரிடம், நியாயமான கோரிக்கைகள் வைத்தோம்.விபூதி,சந்தனம் என்ற ஒவ்வொரு பிரசாதங்களை பெற்றுக் கொண்டோம்.இதோ மகா ஆரத்தி காட்டும் நேரம்.இதற்குத் தானே ஆசைப்பட்டோம் இறைவா என்று நெஞ்சுருகிய நேரம் அது.இப்போது நினைத்தாலும் மனம் ஒடுங்கும் நேரம் அது.சொல்ல சொல்ல இனிக்கும் தருணம் அது.திகட்டாத இனிப்பு உணர்ந்த தருணம் அது. இந்த சித்தத்தினுள் சிவனை கண்ட தருணம் அது.
இந்த ஜீவனை சிவனாக உணரும் நேரம் அது.சித்தரியல் காட்டும் பரவசம் அது.







அப்புறம், குழந்தைவேலரின் அலங்காரம் பார்க்க காத்திருந்தோம்.தெய்விக அழகில் ..அப்பப்பா.வார்த்தைகள் தேடித் தான் பார்க்க வேண்டும்.இரு கண்கள் போதவில்லை.கண்ணில் அடங்க மறுக்கும் அழகிய சித்தர் பெருமான் தான் குழந்தைவேலர்.இதோ நீங்களும் பாருங்கள்.பார்த்து விட்டு பரவசம் அடையுங்கள்.








இங்கு எப்போதும் விளக்கு சுடரும்.ஆதலால் குருக்கள் நல்லெண்ணெய் வாங்கி வர சொல்லி இருந்தார். அங்கிருந்த அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றப்பட்டது. வேண்டுதல் இல்லை .இல்லை.நன்றி கூறத் தான் மனம் விரும்பியது.எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா..அதற்கு நன்றி..நன்றி..நன்றி என்று கூறினோம்.நீங்களே யோசித்துப் பாருங்கள்.இங்கே உழவாரப் பணி  செய்ய நாம் முடிவெடுக்க வில்லை.அவர் தான் நம்மை தேர்வு செய்தார்.உழவாரப் பணி  அறிவிப்பு பற்றி அறிவிக்கின்றோம்.சுமார் 500 நபர்கள் பதிவை படிக்கின்றார்கள்.அதில் ஒரு 100  பேருக்கு செல்ல விருப்பம் இருக்கும்.சென்னையில் இருப்பவர்களில் ஒரு 50 பேர் தயாராக இருப்பார்கள்.உழவாரப் பணி முந்தைய நாள் இரவு கூட செல்லலாம் என்று திட்டமிடுவார்கள்.ஆனால் உழவாரப் பணியில் இணைவது சுமார் ஒரு 15 முதல் 20 நபர்கள்.அந்த 15 முதல் 20 நபர்களில் நாம் இருக்கின்றோம் என்றால் சும்மாவா? எவ்வளவு புண்ணியம்  நமக்கு இது போன்ற நிகழ்வில் இணைய வாய்ப்பு கிடைக்கும்.அதற்கேனும் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் அல்லவா?


                                            குருக்களிடம் பிரசாதம் பெறும் காட்சி


குழந்தைவேலரின் சிறப்புகள் பற்றி குருக்கள் எடுத்துரைக்கும் காட்சியைத்தான்  மேலே நீங்கள் காண்கின்றீர்கள்.அடுத்ததாக,நாம் குருக்களை மரியாதை செய்ய விரும்பினோம்.இவ்வளவு பொறுமையாக அபிஷேகம்,ஆராதனை செய்த அவரை பாராட்ட வேண்டியது நம் கடமை.




     திரு.ராஜ்குமார் மற்றும் நாகராஜன் ஏகாம்பரம் குருக்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு.


இந்நிகழ்வின் முடிவில்,அப்படியே நம் TUT உறவுகளுக்கு,நம் தளம் சார்பாக ஒரு சிறிய பரிசு கொடுப்பது வழக்கம்.அதனை ,நம் குருக்கள் வழங்க சொல்லி கேட்டுக் கொண்டோம்.இதோ அந்த நிகழ்வின் துளிகள் தங்களின் பார்வைக்கு.



















சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் என்றெல்லாம் கேட்டிருக்கின்றோம்.எனவே இம்முறை அனைவருக்கும் தெரிந்த "எட்டு நடை போடுங்கள்" என்ற சிறிய நூலை பரிசாக கொடுத்தோம்.ஒவ்வொருவராக பெற்றுக் கொள்ளும் காட்சி மேலே பதிவேற்றம் செய்துள்ளோம்.




அடுத்து அனைவர்க்கும் மதிய உணவு பரிமாறப் பட்டது.உணவின் சுவையும் அருமை. அதெப்படி என்று தெரியவில்லை.கோவில்களில் வழங்கப்படும் உணவிற்கு கூடுதல்  சுவை வந்து விடுகின்றது.இனிப்பு,பஞ்சாமிர்தம், புளியோதரை என்று அமர்க்கள படுத்திவிட்டார்கள்.அனைவரும் மனதார மகிழ்ந்தோம்.உடல்,உயிர், அனைத்தும் ஒன்றாக்கி, பேரின்பம் தந்த உழவாரப் பணி  இது  என சொன்னால்  சாலப் பொருந்தும்.பணியில் பங்கேற்ற அனைவருக்கும் இப்போது நன்றி  கொள்கின்றோம். அனைத்தையும் சிறப்பாக நடத்திக் கொடுத்து ,வழிகாட்டிய குருக்களுக்கு நன்றி. மயிலாப்பூர்  பக்கம் சென்றால்,ஒருமுறையென்றும் இந்த கோவிலுக்கு செல்லுங்கள் என்று  சிரம் தாழ்ந்து வேண்டுகின்றோம்.

நிகழ்வின் துளிகள் அனைத்தையும் சேர்த்து,காணொளி வடிவில் தந்த திரு.சந்திரசேகரன் அவர்களுக்கு  நன்றி.

காணொளி இதோ :






முந்தைய பதிவுகளுக்கு :-

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்புhttp://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம்http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்புhttp://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html

No comments:

Post a Comment