Subscribe

BREAKING NEWS

18 September 2017

உலகினை இயக்கும் ஒரு வார்த்தை

அன்பான தள வாசகர்களே.

உலகினை இயக்கும்  ஒரு வார்த்தை.  எது? என்று கண்டுபிடித்து விட்டிர்களா? சரஸ்வதி சபதம்  திரைப்படத்தில் கல்வியா? செல்வமா? வீரமா? என்ற கேள்வியும் அதனை மெய்ப்பிக்கும் பக்திப் பனுவலாக படம் இருக்கும்.இப்போது? சொல்லவே வேண்டாம்? சரஸ்வதி சபதம்  போன்ற பக்திக் காவியங்களை பாருங்கள்.வருகின்ற வளரும் தலைமுறைக்கு சொல்லிக் கொடுங்கள்.நம் பண்பாட்டைப் போற்றுங்கள்.சிறுவர்களுக்கு கராத்தே,குங்பூ இவற்றை விட சிலம்பாட்டம் கற்றுக் கொடுக்க முயற்சி செய்யுங்கள்.சிறுமிகளுக்கு டான்ஸ்,பெல்லி டான்ஸ் போன்றவற்றை விட பரத நாட்டியம் கற்றுக் கொடுக்க உதவுங்கள்..சரி.சரி..பதிவிற்கு செல்வோமா?

 கல்வியா செல்வமா வீரமா என்ற பாடல் பற்றி தனிப் பதிவாக காண்போம்.

அன்பைக் கொண்டு இந்த பதிவைத் தர விரும்புகின்றோம். அன்பைப் பற்றி சொல்லாத அற நூட்கள் இல்லை.அன்பே சிவம். அன்பே வாழ்வு. அன்பு தான் இவ்வுலகை இயக்கம் மகா சக்தி.ஒவ்வொரு மனிதனையும் மகா சக்தி மனிதர்களாக மாற்றுவது அன்பு மட்டுமே. நமக்குத் தெரிந்த வெற்றியாளர்கள் அனைவரும் அன்பின் பிடியின்றி வெற்றி பெற வில்லை என்பது கண் கூடு.

இங்கே நாம் அனைவரும் அறிந்த இரு கதைகளை காண உள்ளோம்.கதையின் கருத்துக்கள் எளிமையாக இருந்தாலும், வாழ்வின் புரிதலை நோக்கி நம்மை நகர்த்தும்.



ஒரு பெண் அவளுடைய வீட்டை விட்டு வெளியேறிய பொழுது அப்பொழுது மூன்று முதியவர்கள் அவள் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்கள். அவர்களைப் பார்த்த அப்பெண் நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் உங்களை பார்த்தால் பசியுடன் இருப்பதாக தெரிகிறது. அதனால் என் வீட்டிற்கு வாருங்கள். நான் ஏதாவது சாப்பிடுவதற்கு தருகிறேன் என்று அப்பெண் அம்மூவரையும் பார்த்து கூறிகிறாள். அதற்கு அம்மூவரும் வீட்டில் உன் கணவன் இருக்கிறாரா என்று கேட்கிறார்கள். அதற்கு அவள் அவர் வீட்டில் இல்லை. வெளியே சென்றிருக்கிறார் என்று பதிலளிக்கிறாள் . அப்பொழுது அவர்கள் அப்படியென்றால் உனது கணவர் வரும் வரை நாங்கள் வரமாட்டோம் என்று கூறிவிடுகிறார்கள். மாலையில் அவளுடைய கணவன் வீட்டிற்கு வந்தபொழுது அவள் நடந்தவற்றை கூறுகிறாள். அதற்கு அவள் கணவன் நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று கூறி அவர்களை அழைத்துக்கொண்டு வா என்று சொல்கிறார். 

அவள் வீட்டிலிருந்து வெளியே வந்து அம்முவரையும் அழைக்கிறாள்.. அதற்கு அவர்கள் நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது என்று கூறுகிறார்கள். ஏன் அப்படி என்று அவர்களிடம் அவள் கேட்டாள். அதற்கு அவர்களில் ஒரு முதியவர் இன்னொருவரை காண்பித்து இவர் செல்வம் என்றும், மற்றொருவரை காண்பித்து இவர் வெற்றி என்றும் நான் அன்பு என்றும் கூறி உள்ளே சென்று உன் கணவனிடம் எங்கள் மூவரில் யார் உன் வீட்டிற்கு வரவேண்டும் என்று ஆலோசனை செய்து எங்களிடம் சொல் என்று அவளிடம் கூறுகிறார். அப்பெண் வீட்டினுள் வந்து தன் கணவனிடம் அந்த முதியவர் கூறிய அனைத்தையும் கூறுகிறாள்.. அதை கேட்ட அவளுடைய கணவன் மிகவும் மகிழ்ச்சியாகி என்ன ஆச்சர்ரியமாக இருக்கிறது!. என்று கூறிவிட்டு, நாம் நம் வீட்டிற்கு செல்வத்தை அழைப்போம். அவர் நம் வீட்டை செல்வத்தால் நிரப்பிவிடுவார் என்று தன் மனைவியிடம் கூறுகிறார். 

அதை கேட்ட அவருடைய மனைவி அதற்கு அதிருப்தி தெரிவிக்கிறாள். ஏன் நாம் நம் வீட்டிற்கு வெற்றியை அழைக்கக்கூடாது? என்று கேட்கிறாள். இதை அனைத்தையும் செவியேற்று கொண்டிருந்த, வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த அவர்களுடைய மகள், ஏன் நாம் அன்பை அழைக்கக்கூடாது? அவரை அழைத்தால் நம் வீட்டை அன்பால் நிரப்பிவிடுவார் அல்லவா? என்று அவள் தன் கருத்தை கூறுகிறாள். இதை கேட்ட அவளுடைய பெற்றோர் தங்களுடைய மகளின் ஆசையின்படி அன்பை வீட்டிற்கு அழைக்க முடிவு செய்கின்றனர். பிறகு தன் மனைவியிடம் அவளுடைய கணவன், நீ வெளியே சென்று அன்பை நம் வீட்டிற்கு அழைத்துக் கொண்டுவா என்கிறார். அப்பெண் வெளியே வந்து அம்மூவரையும் பார்த்து உங்களில் யார் அன்பு, அவர் என் வீட்டிற்கு விருந்தாளியாக வருமாறு அன்புடன் அழைக்கிறேன் என்கிறாள். அதைக் கேட்ட அன்பு வீட்டிற்கு செல்கிறார். அவரை பின் தொடர்ந்து மற்ற இருவரும் செல்கின்றனர். இதைப் பார்த்த அப்பெண், மற்ற இருவரிடமும் ஏன் நீங்கள் வருகிறீர்கள்? 




 நான் அழைத்தது அன்பை மட்டும் தானே? என்று ஆச்சர்யப்பட்டு கேட்கிறாள். அதற்கு அம்மூவரும் ஒன்றாக அப்பெண்ணிடம், நீ செல்வத்தையோ அல்லது வெற்றியையோ அழைத்திருந்தால், மற்ற இருவரும் வெளியே இருந்திருப்போம். ஆனால் நீ அன்பை அழைத்திருக்கிறாய். 

எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு செல்வமும், வெற்றியும் இருக்கும் என்று பதிலளிக்கிறார்கள்!! அன்புதான் நம்மை அதிக சந்தோஷப்பட வைக்கும். 
 
இப்போது புரிகின்றதா? அன்பர்களே..அன்பின்றி இவ்வுலகம் இல்லை. அன்பைப்  சிந்தனை முத்துக்களைப் பார்த்துவிட்டு அடுத்த கதைக்குச் செல்வோம்.

* அன்பு ஆட்சி செய்யுமிடத்தில் அச்சமில்லை. தூய அன்பு அச்சத்தைத் துரத்திவிடக்கூடிய வலிமை கொண்டது -இயேசுபிரான்

* எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள். ஆனால் அன்போடு பரிமாறுங்கள் -இங்கிலாந்து பழமொழி

* அன்புடன் கூர்மையான அறிவும் சேர்ந்துவிட்டால், அதனால் அடைய முடியாதது உலகில் எதுவும் கிடையாது -கதே

* உலகில் மிகவும் தெய்வீகமானது எது? சக மனிதனிடம் நீங்கள் காட்டும் அன்புதான்  -வால்டேர்



* அன்பை விற்கவோ, வாங்கவோ முடியாது. அன்புக்கு அன்பே விலை  -ஜான்கீட்ஸ்

* நான் எதையும் நேசிக்கிறேன். அதனால்தான் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடிகிறது -  -டால்ஸ்டாய்

* உங்கள் அன்பை ரகசியமாக வைத்திருக்காமல் நல்ல நல்ல செயல்கள் மூலம் அதை வெளிப்படுத்திக்கொண்டே இருங்கள் -  -இரவீந்தரநாத் தாகூர்

* அன்புக்கு விலை இல்லை. ஆனால் அது எல்லாவற்றையும் விலைக்கு வாங்கி விடுகிறது -மாண்டேகு

* நீங்கள் பிறருக்குத் தரும் பரிசுப்பொருளைவிட மேன்மையானது அன்புதான்  -கார்லைல்




அடுத்த கதைக்கு செல்வோமா? சிறிய கதை தான். பொருள்  பொதிந்த கதை.மீண்டும் மீண்டும் படியுங்கள். அன்பின் விலை புரியும்.

ஆறு வயது சிறுவன் ஒருவன் தன் நான்கு வயது தங்கையை அழைத்து கொண்டு கடை தெருவின் வழியே சென்று கொண்டு இருந்தான்.

ஒரு கடையின் வாசலில் இருந்த பொம்மைகளை பார்த்து தயங்கி நின்ற தங்கையை பார்த்து, "எந்த பொம்மை வேண்டும்?'' என்றான்.

அவள் கூறிய பொம்மையை எடுத்து அவள் கையில் கொடுத்து விட்டு ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் கடையின் முதலாளியை பார்த்து... ''அந்த பொம்மை என்ன விலை?'' என்று கேட்டான்.

அதற்கு சிரித்துக்கொண்டே அந்த முதலாளி,

''உன்னிடம் எவ்வளவு உள்ளது?'' என்று கேட்டார்.

அதற்கு அந்த சிறுவன்.... தான் விளையாட, சேர்த்து வைத்து இருந்த கடல் சிப்பிகளை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்தான்!

''இது போதுமா...?" என்று கவலையுடன் கேட்டான்.

அதற்கு அந்த கடைக்காரர் அவனின் கவலையான முகத்தை பார்த்து கொண்டே...., "எனக்கு நான்கு சிப்பிகள் போதும்!'' என்று மீதியை கொடுத்தார்.

சிறுவன், மகிழ்ச்சியோடும் மீதி உள்ள சிப்பிகளோடும்.... தன் தங்கையோடு அந்த பொம்மையை எடுத்துக்கொண்டு சென்றான்.

இதை எல்லாம் கவனித்து கொண்டு இருந்த அந்த கடையின் வேலையாள்.... முதலாளியிடம்,

"அய்யா! ஒன்றுக்கும் உதவாத சிப்பிகளை வாங்கிக்கொண்டு விலை உயர்ந்த பொம்மையை கொடுத்து விட்டீர்களே...." என்றான்.

அதற்கு அந்த முதலாளி,

''அந்த சிறுவனுக்கு, 'பணம் கொடுத்தால்தான் பொம்மை கிடைக்கும்' என்று புரியாத வயது. அவனுக்கு அந்த சிப்பிகள்தான் உயர்ந்தவை.

நாம் பணம் கேட்டால் அவன் எண்ணத்தில் 'பணம்தான் உயர்ந்தது' என்ற மாற்றம் வந்து விடும்... அதை தடுத்து விட்டேன்.

மேலும், 'தன் தங்கை கேட்டவற்றை தன்னால் வாங்கித் தர முடியும்' என்ற தன்னம்பிக்கையை அவனுக்குள் விதைத்து விட்டேன்.

என்றோ ஒரு நாள்... அவன் பெரியவன் ஆகி இந்த சம்பவங்களை நினைத்து பார்க்கையில், 'இந்த உலகம் நல்லவர்களால் ஆனது!' என்ற நல்ல எண்ணம் அவன் மனதில் தோன்றும்.

ஆகையால், அவன் எல்லோரிடமும் அன்பு காட்ட தொடங்குவான். உலகம் அன்பினால் கட்டமைக்க பட வேண்டும்'' என்றார்!

"அன்பு" என்ற ஒரு வார்த்தையில் தான் இன்னும் இந்த உலகமும் உயிரினங்களும் வாழ்ந்துகொண்டிருக்கிறது...

எத்தனை சாத்தியமான வார்த்தைகள்.இந்த வார்த்தைகளை உங்கள் வாழ்க்கையாக்குங்கள்.வெற்றி நிச்சயம் !




முந்தைய பதிவுகளுக்கு :-

மண(ன)ப் பொருத்தம் - தொடர்பதிவு (1) - https://tut-temple.blogspot.in/2017/08/1.html

மண(ன)ப் பொருத்தம் - தொடர் பதிவு - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_78.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (1) - http://tut-temple.blogspot.in/2017/07/1.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html

இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. 'வெற்றி' உங்களை தேடி வரும்..! - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_4.html

சிக்கல்களில் இருந்து சீக்கிரம் மீள்வோமா? - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_2.html

ஓடுவது முள் அல்ல...நம் வாழ்க்கை - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post.html

தாலாட்டு வேண்டுமா? தேசிய கீதம் வேண்டுமா? - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_51.html

இவ்வளவுதங்க குடும்பம்...! - http://tut-temple.blogspot.in/2017/04/blog-post_98.html

நட்பின் வலிமை - http://tut-temple.blogspot.in/2017/04/blog-post_55.html

ஆழ்மனத்தின் ஆற்றல் - http://tut-temple.blogspot.in/2017/04/blog-post_17.html

உருகி உருகி நான் பிராத்திக்கும் கடவுளிடம் ஒரு நாள் பேச சந்தர்ப்பம் கிடைத்தது... - http://tut-temple.blogspot.in/2017/04/blog-post_6.html

கடவுளை காட்டுங்க! - http://tut-temple.blogspot.in/2017/04/blog-post_24.html

சில நேரங்களில் சில மனிதர்கள்... - http://tut-temple.blogspot.in/2017/04/blog-post_14.html

கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்!!! - http://tut-temple.blogspot.in/2017/04/blog-post_13.html

கண்ணனுக்கு சொன்ன கதை - http://tut-temple.blogspot.in/2017/04/kannanukku-sona-kathai.html



No comments:

Post a Comment