Subscribe

BREAKING NEWS

07 August 2017

காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே! - பதிவின் இறுதியில் முக்கிய அறிவிப்பு

காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே!

ஆம் ! அன்பர்களே.தங்களுக்கு மிகவும் பரிச்சயமான பாடல் வரிகள் தான்.ஆனால் பாடல் சொல்லும் வரிகள் வாழ்க்கையின் தத்துவத்தை அக்குவேறு ஆணி வேறு என்று பிரித்து அல்லவா சொல்கின்றது. பட்டினத்தாரின் பாடல் வரிகள்.பதிவின் இறுதியில் முக்கிய நிகழ்வின் இணைப்பை சேர்த்துள்ளோம்.வாய்ப்புள்ள அன்பர்கள், கண்டிப்பாக நிகழ்வில் கலந்து கொள்ளவும்.

 சற்று விளக்கமாக பட்டினத்தாரின் வரலாறுகாண்போம்.பட்டினத்தடிகள்,பட்டினத்தார்,பட்டினத்துப்
பிள்ளை,பட்டினத்துப் பிள்ளையார்,திருவெண்காட்டு அடிகள் என்ற பெயர்களில் இவர் அழைக்கப் படுகின்றார். செல்வம் என்றாலே நமக்கு குபேரன் தான் நினைவிற்கு வருவார்.வானுலக தேவர்களில் ஒருவரான குபேரன் தான் இப்பூவுலகில் பட்டினத்தாராக அவதரித்தார் என்று திருவெண்காட்டுப் புராணம் கூறுகிறது.அப்படியாயின் சற்று நினைத்துப் பாருங்கள்.  பட்டினத்தாரின் செல்வச் செழிப்பை.!













 சோழ நாட்டு தலைநகரம் காவிரிப்பூம்பட்டினத்தில் சிவநேசர், ஞானகமலாம்பிகை என்னும் சிவபக்த தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருவெண்காட்டில் உறையும் சுவேதாரண்யப் பெருமானை வேண்டி தவத்தால் பெற்ற பிள்ளைக்கு சுவேதாரண்யன் என்று பெயரிட்டனர் . பின்பு திருவெண்காடர் என்று அழைக்கப்பட்டார் . சிறந்த சிவபக்தரான திருவெண்காடர் கடல் கடந்து வாணிபம் செய்யும் பணி செய்து வந்தார் . தனது 16ம் வயதில் சிவகலை என்பவரை மணந்து கொண்டார். 




 திருமணமாகி பல்லாண்டுகளாக இத்தம்பதியருக்கு குழந்தை இல்லை. திருவெண்காடர் சிவனை வழிபட்டு, புத்திரப்பேறு அருளும்படி வேண்டினார். இதனிடையே சிவசருமர், சுசீலை என்னும் மற்றொரு சிவபக்த தம்பதியினருக்கு இறை அம்சத்தோடு பிறந்த குழந்தைக்கு மருதவாணர் என பெயரிட்டு சீரும், சிறப்புமாக வளர்த்தனர். சிவனுக்கு சேவை செய்தே வறுமையில் வாடிய இத்தம்பதியரால், ஒருகட்டத்தில் குழந்தையை சரியாக வளர்க்க முடியவில்லை. 





 சிவசருமரின் கனவில் தோன்றிய எம்பெருமான் , மருதவாணரை திருவெண்காடருக்கு தத்து கொடுத்து, பதிலாக பொருள் பெற்றுக்கொள்ளும்படி கூறினார். அதேசமயம் திருவெண்காடரின் கனவில் தோன்றிய சிவன், மருதவாணரை வளர்க்கும்படி கூறினார். அதன்படி திருவெண்காடர், மருதவாணரை தத்தெடுத்து வளர்த்தார்.


 மருதவாணரும் தந்தையின் தொழிலையே செய்தார். ஒருசமயம் மருதவாணர், கடல் கடந்து வாணிபம் செய்துவிட்டு ஊர் திரும்பினார். தாயாரிடம் ஒரு பெட்டியை மட்டும் கொடுத்த அவர், ஒன்றும் சொல்லாமல் வீட்டை விட்டு சென்றுவிட்டார். இதனிடையே வெளியே சென்றிருந்த திருவெண்காடர், மகன் சம்பாதித்து வந்திருப்பதை காண பெட்டியைத் திறந்தார். அதில் தவிட்டு உமிகளைக் கொண்டு செய்யப்பட்ட எரு மட்டும் இருந்தது. கோபம் கொண்ட அவர், எருவை வீசியெறிந்தார். அதற்குள், ""காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே'' என்று எழுதப்பட்ட காகிதத்தைக் கண்டார்.








 திருவெண்காடருக்கு ஏதோ சுரீர் என்று உரைத்தது. ""மனிதன் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியைக்கூட கையில் கொண்டு செல்ல முடியாது,'' என்று உணர்ந்தார். உடன் இல்லற வாழ்க்கையை துறந்த அவர், சிவனை வணங்கி முக்தி கொடுக்கும்படி வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், தகுந்த காலத்தில் முக்தி கிடைக்கும் என்றார். அதன்பின் திருவெண்காடர் சிவாலயங்களை தரிசிக்க ஆரம்பித்தார் . காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர் என்பதால், இவர் "பட்டினத்தார்' என்றழைக்கப்பட்டார்.




பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார். அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார். அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை அடுக்கி பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச் செய்தார். அந்தப் பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை.





பத்திரகிரியார் தொடர்பு
 பட்டினத்தார் வடநாடு நோக்கிச் சென்றார். உஜ்ஜயினி நாட்டை ஆண்ட அரசர் பத்திரகிரியார். இவர் பட்டினத்தாரை தவறான புரிதலில் கள்வர் என்று எண்ணிக் கைது செய்து கழுவிலேற்ற ஆணையிட்டார். பட்டினத்தார் இறைவனைத் துதித்தார். கழுமரம் தீப்பற்றி எரிந்தது. அதனைக் கண்ட அரசர் மனம் நடுங்கி, அடிகளை வணங்கி நின்றார். பின் அரசர் பட்டினத்தாருக்கு அடிமையானார் துறவு பூண்டு பட்டினத்தாரை தொடர்ந்து திருவிடைமருதூரையடைந்தார். பட்டினத்தார் திருக்கோயில் கீழைக் கோபுரவாயிலிலும், பத்திரகிரியார் மேலைக் கோபுரவாயிலிலும் சிவயோகத்தில் அமர்ந்தனர். ஞானம் பெற்ற பத்திரகிரியார் பாடிய பாடல்கள் "மெய்ஞானப் புலம்பல்" என்று பெயர் பெற்றவை. 





 திருவிடைமருதூர் தலத்தில் இருவரும் சிலகாலம் தங்கியிருந்தனர். ஒருநாள் மகாலிங்கப் பெருமான் அடியார் உருவில் பட்டினத்தாரை அடைந்து பிச்சைக் கேட்டார். பட்டினத்தார் மேலைக் கோபுரவாயிலில் ஒரு சம்சாரி உள்ளார் அவர் பால் செல்க என்றார். அடியார் உருவில் வந்த மகாலிங்க பெருமான் பட்டினத்தார் கூறியதைத் தெரிவித்து பத்திரகிரியாரிடம் பிச்சைக் கேட்டார். பத்திரகிரியார் உடனே இத்திருவோடும் நாயும் அல்லவோ என்னை சம்சாரி ஆக்கின என்று கூறி திருவோட்டை வீசினார். அத்திருவோடு நாயின் மேல் பட்டு நாய் இறந்தது ..

நாய் மீண்டும் அடுத்த பிறப்பாக காசி அரசனின் மகளாய்ப் பிறந்து வளர்ந்தது. சிலகாலம் கழித்து அப்பெண் இறைவனை தரிசிக்க திருவிடைமருதூர் வந்தடைந்தாள். திருவிடைமருதூரில் தனது முற்பிறப்பு நினைவால் பத்திரகிரியாரிடம் தன்னை அடிமையாக ஏற்குமாறு வேண்டினாள். அதிர்ந்து போன பத்திரகிரி அப்பெண்ணுடன் தன் குருவாகிய பட்டினத்தாரை அடைந்து வேண்ட மூவரும் திருக்கோவிலுக்குள் சென்று மகாலிங்க பெருமானை வணங்கும் பொழுதில் அங்கு தோன்றிய சோதியில் அந்தப் பெண்ணும் பத்திரகிரியாரும் சோதியில் கலந்தார்கள்.





 பட்டினத்தார் இப்பேறு கிட்டவில்லை என்று வருந்தினார் மகாலிங்கப் பெருமான் பேய்க் கரும்பு அளித்து இப்பேய்க் கரும்பு எப்போது தித்திக்கிறதோ அப்போது உனக்கு முத்தி பேறு கிட்டும் என்றருளினார். அப்பேய்க்கரும்பு திருவொற்றியூரில் தித்தித்தது. பட்டினத்தார் அங்கு முத்தி அடைந்தார்.அங்கே கடற்கரையில் சிறுவர்களுடன் சித்து விளையாடியபடி தன்னை மண்மீது மூடச் செய்து மறைந்து சமாதியானார் .அவர் மறைந்த இடத்தில் லிங்கம் ஒன்று மட்டும் இருந்தது .









 சீடர் பத்திரகிரியார் முக்திக்கு பிறகு பட்டினத்தடிகள், திருவெண்காடு, சீர்காழி, சிதம்பரம் போன்ற சிவத்தலங்களுக்குச் சென்று பாடிய பாடல்கள் அனைத்தும் சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுப்பில் உள்ளன. அவை

கோயில் நான்மணிமாலை
திருக்கழுமல மும்மணிக்கோவை
திருஏகம்பமுடையார் திருவந்தாதி
திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது










 தற்போது பட்டனத்தார் ஜீவ ஐக்கியம் பெற்ற அதே இடத்தில் ஆலயம் புதிய பொலிவு பெற்று திகழ்கிறது பட்டினத்தாரின் பிறந்த நட்சத்திரம் உத்திராடம். எனவே ஒவ்வொரு மாத உத்திராடத்தின் போதும், வியாழக்கிழமையிலும் சிறப்பு பூஜை நடக்கிறது. அப்போது பழங்களை நைவேத்யமாக படைத்து பூஜை செய்யப்படுகிறது. 




இவருக்கு அபிஷேகம் செய்யப்பட்ட விபூதியையே, பிரசாதமாக தருகிறார்கள். இதனை உட்கொண்டால் பிணி நீங்குவதாக நம்பிக்கை. குபேரனே, பூலோகத்தில் சிவதரிசனம் செய்வதற்காக பட்டினத்தாராக பிறந்ததாக சொல்வர். ஆகவே இவரிடம் வேண்டிக்கொண்டால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.

திருவொற்றியூர் பஸ் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஆதிபுரிஸ்வரர் உடனுறை வடிவுடை அம்மன் ஆலயத்தை முதலில் தரிசனம் செய்யுங்கள். அந்த கோயிலுக்கு தியாகராஜா ஆலயம் என்று கூறுகின்றனர். அந்த ஆலயத்தில்  இருந்து சுமார் பத்து நிமிடம் நடை பயணமாக சென்று பட்டினத்தாரின் ஜீவ சமாதியை அடையலாம். 


முக்கிய அறிவிப்பு:



நாளை பட்டினத்தாரின் மஹா குரு பூஜை திருவொற்றியூரில் நடைபெறுகின்றது. அன்பர்கள் தவறாது கலந்து கொண்டு, பட்டினத்தாரின் அருள் பெறுக!


முந்தைய பதிவுகளுக்கு :-

மனக் கஷ்டம் நீங்க..மயிலாண்டவர் திருக்கோவிலுக்கு வாங்க !http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_24.html


மருதேரியில் ஸ்ரீ பதஞ்சலியின் ஆசிகள் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_15.html







ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html


No comments:

Post a Comment