Subscribe

BREAKING NEWS

02 January 2018

ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர குரு பூஜை - 04/01/2018

அகத்தியர்

அன்பின் ஆழம் மூலம் நமக்கு கருணை மழை பொழிந்து வரும் சித்தர். அகத்தியரை வழிபட நாம்
எத்தனை பிறவிகள் எடுத்து வந்தோம் என்று நமக்குத் தெரியாது, புல்லாகி பூடாகி புழுவாகி மரமாய்
இதோ இந்த மனித பிறவியில் நுழைந்திருக்கும் நாம் குரு வழிபாடு, சித்தர்கள் பூஜை என்று செய்து வருகின்றோம். நாம் மாதந்தோறும் ஆயில்ய ஆராதனை கூடுவாஞ்சேரியில் உள்ள அகத்தியர் மகரிஷிக்கு செய்து வருகின்றோம். வருகின்ற வியாழன் அன்று வருகின்ற ஆயில்யம் மகா குருபூஜை. இந்த குரு பூஜையை ஒட்டி, உலகெங்கும் உள்ள அகத்தியர் ஆலயங்களில் வழிபாடு, பூஜை என நடைபெற உள்ளது. நமக்குக் கிடைத்த தகவல்களை இங்கே தொகுத்து ஒருங்கே தர முயற்சிக்கின்றோம். வாய்ப்புள்ளவர்கள் அருகே நடைபெறும் அகத்தியர் பூசையில் கலந்து கொண்டு சித்தர் பெருமக்களின் அருள் பெற வேண்டுகின்றோம்.



1. பஞ்சட்டி அகத்தீஸ்வரர் கோவில் 

 அகத்திய முனிவர் செய்த ஐந்து யாகங்களுக்கு பஞ்ஜேஷ்டி என்று பெயர். (இஷ்டி என்றால் யாகம். ஐந்து யாகங்கள் என்பதால் பஞ்ச இஷ்டி) அதுவே இத்தலப் பெயரானது. அந்த யாகத்துக்கு அசுர சக்திகளும், தீயசக்திகளும் தடை ஏற்படுத்திட முயல, அகத்திய முனிவர் தேவியைத் துதித்து காத்தருள வேண்டினார். உடனே அம்பிகை மூன்று கண்களைக் கொண்ட திரிநேத்ரதாரணியாக இத்தலத்தில் தோன்றி, தனது இடது காலை முன் வைத்து மூன்றாவது கண்ணால் அந்த அசுர சக்திகளையும், தீய சக்திகளையும் எரித்துச் சாம்பலாக்கினாள். பிறகு அகத்திய முனிவர், அம்பிகைக்கு தனது நன்றியைத் தெரிவிக்கும் பொருட்டும், அவள் சாந்த நிலைக்குத் திரும்பவும் அம்பாளுக்கு முன்பாக மிகப் பெரிய துர்க்கா மஹா யந்திரத்தை தமது கையாலே பிரதிஷ்டை செய்தார். அம்பாளை இப்படி திரிநேத்ரதாரணியாக அதாவது முக்கண்ணுடையாளாக இந்தத் தலத்தில் மட்டுமே தரிசிக்க முடியும்.

முதலில் பஞ்சட்டி அகத்தீஸ்வரர் தீருக்கோயில் குறிப்புகளும், பூசை விபரங்களும். இத்தலத்து ஈசன், அகத்தீஸ்வரர் என்ற திருநாமம் தாங்கி அருள்பாலிக்கின்றார். அகத்தியர் இந்தத் தலத்துக்கு வருவதற்கு முன்பே இங்கு ஈஸ்வரன் லிங்க வடிவில் கோயில் கொண்டிருந்தாராம். அகத்தியர் வந்து வழிபாடு செய்ததால் அகத்தீஸ்வரர் என்றே ஈஸ்வரன் அழைக்கப்படலானார். லிங்கத்தின் இடதுபாகத்தில் அம்பாள் மனோன்மணி சக்தியை ஒரு ரூபமான தோற்றத்தில் வைத்து சிவசக்தி சொரூபமாக அகத்திய முனிவர் பூஜித்துள்ளார்.

அகத்தியரால் செய்யப்பட்ட ஐந்து யாகங்களில் அன்னதானத்தையே மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். எனவே இந்த ஆலயத்தில் அன்னதானம் செய்தால் இழந்த பதவிகள் மீண்டும் கிடைப்பதாகவும், உயர் பதவிகள் தேடி வரும் என்றும், பிறவிப்பயனைப் பெறுவதற்கு வாய்ப்பாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

இத்தனை சிறப்புகளைக் கொண்ட கோயியிலில் நடைபெற உள்ள குரு பூஜை அழைப்பு கீழே.




மெய் அன்பர்களே.

நிகழும் மங்களகரமான ஹேவிளம்பி வருடம்  மார்கழி மாதம் 20 ஆம் நாள் (04/01/2018) வியாழக்கிழமை ஆயில்ய நட்சத்திரமும்,
அமிர்த யோகமும் கூடிய சுப தினத்தில் காலை 10 மணி  முதல் பஞ்சட்டி அகத்தீஸ்வரர் கோயிலில்  அருள்பாலிக்கும் அகத்தியர் லோபாமுத்திரை  தம்பதியினருக்கு அபிஷேகம், அலங்காரம்  செய்து ஆயில்ய ஆராதனை செய்ய உள்ளோம்.

 அனைவரும் வருக !! அகத்தியர் அருள் பெறுக !!

அடுத்து நாம் காண இருப்பது பனப்பாக்கம் மாயூரநாதர் கோயிலில் அருள் பாலிக்கும் அகத்தியர் தரிசனமும், ஆயில்ய ஆராதனையும். பனப்பாக்கம் அகத்தியர் கோயிலில் நடைபெற்ற 108 கலச பூஜை பற்றியும், பனப்பாக்கம் திருத்தல மகிமை பற்றியும் ஏற்கனவே பதிவிட்டுள்ளோம். மீண்டும் ஒருமுறை மீள்பதிவாய் பதிவின் இறுதியில் கண்டு மகிழவும்.

2. பனப்பாக்கம் ஸ்ரீ மாயூரநாதர் திருக்கோயில் 



வேலூர் மாவட்டத்திலுள்ள பனப்பாக்கம் என்ற ஊரிலுள்ள ஸ்ரீமாயூர நாத ஆலயத்தில எழுந்து அருள் புரியும் ஸ்ரீ லோப மாத சமேத ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு 4/1/18/ அன்று  மாலை 5 மணி முதல் ஆயில்ய நட்சத்திர பூஜை விழா நடைபெற உள்ளதால் அனைவரும் வருக ஐயன் அருள் பெறுக

அடுத்து நாம் காண இருப்பது கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில்.

3. கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் 



இறை நேயர்களே.


கோயில் நகரம் என்று அழைக்கப்படும் கும்பகோணத்தில் எண்ணற்ற மகான்கள், ஞானிகள் தவம் புரிந்துள்ளனர்.அவர்களில் சைவத்தை பரப்புவதில் சிறந்தவரும் 18 சித்தர்களில் முதன்மையானவருமான  ஸ்ரீ அகத்திய பெருமானுக்கு நிகழும் மங்களகரமான ஹேவிளம்பி வருடம் மார்கழி மாதம் 20-ம் நாள் (04-01-2018) வியாழக்கிழமை ஆயில்ய நட்சத்திர தினமான அன்று காலை விசேஷ ஹோமம் ,அபிஷேகம், அன்னதானம், மற்றும்  மாலை சித்தர் திருவீதி உலாவும் நடை பெற உள்ளது.


பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ கும்பமுனி அருள் பெற வேண்டுகிறோம் .


அடுத்து நாம் காண இருப்பது கூடுவாஞ்சேரி அகத்தியர் பெருமான்ஆயில்ய ஆராதனை 

4. கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆயில்ய ஆராதனை 





மெய் அன்பர்களே.

நிகழும் மங்களகரமான ஹேவிளம்பி வருடம்  மார்கழி மாதம் 20 ஆம் நாள் (04/01/2018) வியாழக்கிழமை ஆயில்ய நட்சத்திரமும்,அமிர்த யோகமும் கூடிய சுப தினத்தில் மாலை 4 மணி முதல் கூடுவாஞ்சேரி - மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அகத்திய மகரிஷிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து ஆயில்ய ஆராதனை செய்ய உள்ளோம். இந்நிகழ்வில் உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ வேண்டி 108 தீபம் ஏற்றி வழிபாடு செய்ய உள்ளோம்.அன்பர்கள் தவறாது கலந்து கொண்டு அகத்தியரின் அருள் பெற வேண்டுகின்றோம்.


தொடர்புக்கு : 7904612352/9677267266
tut-temple.blogspot.in
https://www.facebook.com/thedalullathenikalaai/

அடுத்து நாம் காண இருப்பது திருச்செந்தூர் அகத்தியர் பெருமான் குருபூஜை அழைப்பிதழ்

5. திருச்செந்தூர் அகத்தியர்  பெருமான் 



திருச்செந்தூரில், நமது குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானுக்கு மார்கழி மாத மஹாஆயில்யம் ஜென்ம நட்சத்திரத்தை முன்னிட்டு வரும் 4/1/2018 வியாழக்கிழமை அன்று மூலிகை பொருட்களாலும், மூலிகை சார்ந்த பச்சை வர்ண மலர்களாலும்,அபிஷேகம்,அலங்காரம், ஆராதனைகள் மற்றும் அன்னதானம் அனைத்தும் சிறப்பாக நடைபெற உள்ளது.

அடுத்து நாம் காண இருப்பது மஹா ஆயில்ய திருமண வைபவம் - அகத்தியர் ஞானம் இல்லம் அழைப்பிதழ் 

6. பாண்டிச்சேரி அகத்தியர் ஞானம் இல்லம் 

நாம் இங்கே இரண்டு முறை சென்று அகத்தியர் அருள் பெற்றோம். அதனை நம் TUT தளத்தில் பதிவேற்றி உள்ளோம். இந்த தளத்தில் திருமண சம்பந்தமான நியாயமான கோரிக்கைகள் பிரார்த்தனை வாயிலாக அகத்தியர் ஆசி பெற்று சரியாகி வருவதாக கூறி உள்ளனர். நாமும் கண்டு,கேட்டு தெளிவுற்றோம். பதிவின் இறுதியில் உள்ள இணைப்பில் தரிசனம் பெறவும்.


மெய் அன்பர்களே.

நிகழும் மங்களகரமான ஹேவிளம்பி வருடம்  மார்கழி மாதம் 20 ஆம் நாள் (04/01/2018) வியாழக்கிழமை ஆயில்ய நட்சத்திரமும்,அமிர்த யோகமும் கூடிய சுப தினத்தில் காலை 6:30  மணி முதல் பாண்டிச்சேரி அகத்தியர் ஞானம் இல்லத்தில் அருள்பாலிக்கும் அகத்தியர் லோபாமுத்திரை  தம்பதியினருக்கு அபிஷேகம், அலங்காரம்,திருமண வைபவம்  செய்து ஆயில்ய ஆராதனை செய்ய உள்ளோம்.

  6:30 மணி - அபிஷேகம்
  9:00 மணி - ஹோமம்
10:30 மணி -திருக்கல்யாணம்
11;30 மணிக்கு மேல் - திருக்கல்யாண விருந்து

அனைவரையும் வருக! வருக!! என்று பாண்டிச்சேரி அகத்தியர் ஞானம் இல்லம் சார்பாக வரவேற்கின்றோம்.

மேலும் தொடர்புக்கு; சுவாமிநாதன் 9894269986 & ராகேஷ் 7904612352

https://www.facebook.com/swaminathan.gopalan.96
https://www.facebook.com/thedalullathenikalaai

வெளியூர் அன்பர்கள்.( வாட்ஸப் ல் பிராத்தனை அனுப்பலாம்.)
பூஜையில் கலந்து கொண்டு குருவருள் பெறுக ! காணிக்கை.கட்டணம் பணம் பெறுவது இல்லை.
உங்கள் அருகில் உள்ள ஏழைகளுக்கு உதவுங்கள். அகத்தியர் கருணை பார்வை பெறுங்கள்.

 அடுத்த நாம் காண இருப்பது தூசி கிராமத்தில் ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீ அபிமூர்த்தீஸ்வரர் ஆலயத்தில் அகத்திய பெருமானுக்கு குரு பூஜை விழா 

7.  தூசி கிராமத்தில் ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீ அபிமூர்த்தீஸ்வரர் ஆலயம் 

ஸ்ரீ அகத்தியர் ஸ்ரீ உலோபமுத்ரா தேவியருக்கு, முக்தி தரும் நகர் ஏழினுள் முக்கிய நகராம் நகரேஷ { காஞ்சி என்று மகாகவி காளிதாசரால் புகழப் பெற்றதும், சப்த ரிஷிகள் வழிபட்டதும், ஷண்மதத்தில் (ஆறு மதம்) நான்கு மதங்கள் சங்கமிப்பதும் சைவம் - பஞ்சப பூதத் தலங்களுள் ப்ருதி (மண்) ஸ்தலம், சமயக்குரவர்களால் (நால்வர்) பதிகம் பெற்ற தலமும், சாக்தம் - 108 சக்தி பீடங்களில் நாபிஸ்தானமாக விளங்குவதும், வைணவம் - 108 திவ்ய தேசத்தில் பதினைந்து திவ்ய தேசங்களைக் கொண்டதும், கௌமாரம் - கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்தபுராணம் அரங்கேறியதும், ஸ்ரீ அகத்தியருக்கு பங்குனி உத்திர நன்னாளில் சிவபெருமான் பார்வதி தேவியர் தமது திருமண கோலத்தில் காட்சி அளித்ததுமாகிய இத்தகைய காஞ்சிபுரத்தில் உள்ள பாலாற்றங்கரைக்கு அருகில் திருவண்ணாமலை மாவட்டம் தூசி கிராமத்தில் வேண்டியவர்க்கு வேண்டியவற்றை அருளும் அபிராமி உடனுறை அபிமூர்த்தீஸ்வரர் ஆலயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளில் மட்டுமே உள்ள ஸ்ரீ அகத்தியர் - ஸ்ரீ உலோபமுத்ரா தேவி ஆலயம் பழமையை பறைசாற்றும் வகையில, தொன்மைவாய்ந்த கட்டிட கலையில் முற்றிலும் கருங்கற்களால் நிர்மாணிக்கப்பட உள்ளது. எட்டு திசைகளை குறிக்கும் வகையில் எட்டு யானைகள், இந்த ஆலயத்தை தாங்கி நிற்பது போல் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ரிஷிகள், ஞானிகள், யோகிகள் ஆற்றங்கரையோரம் வாசம் புரிவதை கருத்தில் கொண்டு (காஞ்சி ஸ்ரீ மகாபெரியவாள் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகள் மணிமண்டபம் அருகில்) அமைந்து உள்ளது. 

ஸ்ரீ அகத்திய மாமுனிவர் திரிசடையுடன் அமர்ந்த கோலத்தில் வலது கையில் சின் முத்திரை, ஜபமாலையுடனும், இடது கையில் கமண்டலத்துடனும் காட்சி அளிக்கிறார். ஸ்ரீ உலோபமுத்ரா தேவி அமிர்தகலசம் தாங்கி பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார்.



இத்தகைய ஆலயத்தில் வரும் 04-01-2018 அன்று  குரு  பூஜை நடைப் பெற உள்ளது.அனைவரும் கலந்து கொண்டு குருவருளும் திருவருளும் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் .


8. அடுத்து நாம் காண இருப்பது  அனுவாவி மலையில் உள்ள அகத்தியர் கோயிலில் நடைபெற உள்ள குருபூஜை அழைப்பிதழ்.

அழைப்பிதழை இணைத்துள்ளோம். மேலதிக விபரங்களுக்கு :



9.  அடுத்து நாம் காண இருப்பது வேலூரில் நடைபெற உள்ள அகத்தியர் ஜெயந்தி விழாவிற்கான அழைப்பிதழ்.



10. அடுத்து நாம் காண இருப்பது ஸ்ரீ அகத்தியர் ஞான பீடம் கல்லாரில் நடைபெற உள்ள குருபூஜை விழாவிற்கான அழைப்பிதழ்.



11. வேதாரண்யம் அகத்தியன் பள்ளியில் நடைபெற உள்ள பூஜை தகவல் கீழே


12. மருதமலை ஐ.ஓ.பி  காலனியில் நடைபெற உள்ள பூஜை தகவல் இதோ:



13. திண்டுக்கல் சிறுமலையில் நடைபெற உள்ள குருபூஜை தகவல் கீழே


14. மதுரையில் நடைபெற உள்ள அகஸ்தியர் ஜெயந்தி விழா அழைப்பிதழ்

15. கும்பகோணம் கருவளர்சேரியில் நடைபெற உள்ள விழா


16.  அருள்குரு அகத்தியர் அருள்சித்தர் பீடத்தில் நடைபெற உள்ள  குருபூஜை விழா அழைப்பிதழ் கீழே 



17. ஸ்ரீ ல ஸ்ரீ வெள்ளாடை சித்தர் திருக்கோவிலில் ஸ்ரீ மஹாகுரு அகத்திய பெருமானின் அவதார பூஜை மற்றும் 1008 சக்திகள தீப விழா  பற்றி இங்கே காண உள்ளோம்.






 வெள்ளை ஆடை சித்தர் அவர்களின் ஜீவசமாதி கேரளாவில் பாலக்காடு மெயின் ரோடில் கொழிஞ்சம்பார அருகில் அப்புபிள்ளையூர் என்ற இடத்தில் ஸ்ரீ சிற்றம்பல சதாசிவ ஜீவாலயம் என்னும் பெயரில் அமைந்துள்ளது.

வரும் 4/01/2018 அன்று ஸ்ரீ மஹாகுரு அகத்திய பெருமானின் அவதார பூஜை மற்றும் 1008 சக்திகள தீப விழா நடைப் பெற உள்ளது.அன்பர்கள் கலந்து கொண்டு அகத்திய பெருமானின் ஆசியை பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம் 

நமக்கு கிடைத்த தகவல்களை ஒருங்கே இங்கே தொகுத்து தந்திருக்கின்றோம். வாய்ப்புள்ளவர்கள் அருகில் நடைபெறும் குருபூஜையில் கலந்து கொண்டு சித்தர்களின் அருள் பெறவும். கலந்து கொள்ள இயலாதவர்கள் அன்று காலை மாலை நிகழ்த்தும் தினசரி வழிபாட்டில் 

                           ஓம் ஸ்ரீம் லோபாமுத்ரா சமேத அகத்தியர் திருவடி சரணம் 

என்று மனதில் நீங்கள் நினைக்கும் எண்ணிக்கையில் போற்றி செய்து, மனதார தியானிக்கவும். 

இந்தப் பதிவிற்காக பல்வேறு வழிகளில் அலைபேசி, சமூக ஊடகங்கள் வழியாக ( facebook,whatsapp ) தகவல்களை திரட்டித் தந்து உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இங்கே நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.



நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவனை
      நிங்காதார்  குலம் தழைக்க நிதியாவானை
செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்
     சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை
     வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர்  என்று யுகயுகத்தும் தோன்றும்
     அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்


முந்தைய பதிவுகளுக்கு :

 கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர குரு பூஜை - http://tut-temple.blogspot.in/2018/01/blog-post.html

 அகத்தியரைத் துதி, அவர் மாற்றுவார் உன் விதி- (2) - http://tut-temple.blogspot.in/2017/12/2.html

 பனப்பாக்கம் - அகத்திய பெருமான் 108 கலச பூஜை விழா - http://tut-temple.blogspot.in/2017/12/108.html

 துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_21.html

 அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_27.html

 அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017 - https://tut-temple.blogspot.in/2017/09/2017.html

எண்ணுவோம் பெற்றோர்களை முதல் குருவாக! - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_29.html

அகத்தியர் தேவாரத் திரட்டு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_65.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_24.html

மழை வாழ்த்து - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_8.html

சரணம் சரணம் சண்முகா சரணம்! - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_4.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html












No comments:

Post a Comment